Run serial: ரன் வரப் போகுது.. சன் டிவி சீரியல்கள் நேரம் மாற்றம்!
சென்னை: சன் டிவியின் புதிய சீரியலாக ரன் ஆகஸ்ட் ஐந்தாம் தேதியில் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல் ஒளிபரப்பு நேரத்தை அறிவித்த சன் டிவி, மற்ற சீரியல்களின் நேரத்தை மாற்றி அறிவித்து வருகிறது.
சன் டிவி ஜீ தமிழ் டிவிக்கு ட்ஃப் காம்படீஷன் கொடுக்க முடிவு செய்துள்ளதாம். அதனால் மிக பெரிய செலவில், அதே சமயம் . நல்ல ஸ்டார் காஸ்ட் நடிகர் நடிகைகளைப் போட்டு ரன் சீரியலுக்கு அனுமதி அளித்து இருக்கிறது.
ரன் சீரியல் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பாக இருக்குமா, இல்லை குஷ்பூவின் அவினி கிரியேஷன்ஸ் தயாரிப்பாக இருக்குமோ என்கிற சதேகம்,, ஆவல் சீரியல் ஆர்வலர்களுக்கு எழுந்துள்ளது.

நடிகர் கிருஷ்ணா
இயக்குநர் ராஜ்கபூர் இந்த சீரியலில் நடிப்பதால், இது குஷ்பூ நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்குமோ என்கிற பேச்சும், விகடன் டெலிவிஸ்டாஸ் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமான கிருஷ்ணா, மற்றும் சில துணை நடிகை நடிகர்கள் இந்த சீரியலில் நடிக்கும் ப்ரோமோ வெளியாகி வருவதால் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பாக இருக்குமோ என்கிற பேச்சும் எழுந்துள்ளது.

அக்னி நட்சத்திரம் சீரியல்
மாலை 6:30 மணிக்கு புதிதாக அறிவித்து கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகி வரும் தமிழ்சசெல்வி சீரியலை இப்போது மதியம் ஓரு மணிக்கு என்று மாற்றி அறிவித்துள்ளது. அதே நேரம் அந்த நேரத்தில் ஓளிபரப்பாகி வந்த அக்னி நட்சத்திரம் சீரியலின் நேரத்தையும் அரை மணி பின்னதாக மாற்றி அறிவித்துள்ளது..இப்போது மாலை நேர சீரியல்கள் மற்றும் இரவு நேர சீரியல்களில் எந்த நேரத்தை சன் டிவி ரன் சீரியலுக்காக ஒதுக்கி உள்ளது என்று தெரியவில்லை.

மாலை 6:30 மணிக்கு
இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அழகு சீரியலின் நேரம், இப்போது மாலை 6:30 மணிக்கு என்று தமிழ்ச்செல்வி சீரியல் நேரத்தை பிடித்து இருக்கிறது. 7 30 மணி என்பது திருமுருகனின் திரு பிக்சர்ஸ் நேரம் என்பதால் அதில் சன் டிவி கை வைக்கவில்லை.மற்றபடி நாயகி நேரம் தவிர கண்மணி,ரோஜா சீரியல்களின் நேரமும் மாற்றம் இருக்கும் என்று உத்தேசமாக கணிக்கப்படுகிறது.

ஜீ தமிழ் டிவி செம்பருத்தி
விஜய் டிவியின் பிக் பாஸ் நேரமும், ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலின் நேரமும்தான் சன் டிவிக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்த தலைவலியில் இருந்து விடுபடவே அதிக பொருள் செலவில் ரன் புது வரவும், மற்ற சீரியல்களின் நேர மாற்றமும் என்று தெரிகிறது. ஆக 7 மணிக்கு ஒளிபரப்பான அழகு சீரியல் 6 :30 மணிக்கு, 6:30 மணி சீரியலான தமிச்செல்வி மதிய நேரத்துக்கு ஷிஃப்ட் ஆகி உள்ளது. இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் இனி இரவு 7 மணிக்கு. அந்த 9 மணி இடத்தை புதிய வரவு சீரியலான ரன் பிடித்து உள்ளது.இந்த சீரியல் வரும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது..


Click it and Unblock the Notifications











