நெஞ்சத்தைக் கிள்ளாதே… டிவி சீரியலில் நடிக்கும் எஸ்.பி.பி சரண்

By Mayura Akilan

பாடகராக, சினிமா தயாரிப்பாளராக இருக்கும் எஸ்.பி.பி சரண் மீண்டும் டிவி சீரியலில் நடிக்கிறார். சீரியலுக்கு நெஞ்சத்தைக் கிள்ளாதே என்று பெயரிட்டுள்ளனர்.

சன் டிவியில் ஊஞ்சல், அண்ணாமலை சீரியலில் நடித்துள்ளார் எஸ்.பி.பி சரண். தற்போது மீண்டும் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.

நடிகர், பாடகர்

நடிகர், பாடகர்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி சரண். பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். சில படங்களிலும் நடித்துள்ளார்.

சீரியலில் ஹீரோ

சீரியலில் ஹீரோ

சினிமா வாய்ப்பில்லாத காலகட்டத்தில் சரண் ஊஞ்சல், அண்ணாமலை தொடர்களில் நடித்தார். அதன்பிறகு டி.வியில் நடிப்பதை நிறுத்திவிட்டு, தீவிர படத் தயாரிப்பில் இறங்கினார்.

படத்தயாரிப்பாளர்

படத்தயாரிப்பாளர்

சென்னை 28, குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், ஆரண்ய காண்டம் உள்பட சில படங்களை தயாரித்தார். இப்போது மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே

நெஞ்சத்தைக் கிள்ளாதே

வருகிற23ந் தேதி முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கும் நெஞ்சத்தை கிள்ளாதே சிரீயலில் ஹீரோவாக நடிக்கிறார்.

ஜீ தமிழ் டிவியில்

ஜீ தமிழ் டிவியில்

அவருடன் காயத்ரி ரேணுகா, நடிக்கிறார்கள். நிறைய புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள். 300 எபிசோட்களை கொண்ட இந்த தொடரை பிரபு இயக்குகிறார். தற்போது படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. ஜூன் 23ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

நடுத்தர இளைஞராக சரண்

நடுத்தர இளைஞராக சரண்

"இந்த தொடருக்கு 33 வயது நடுத்தர வயது இளைஞர் தேவைப்பட்டார். சரணை கேட்டபோது தயங்காமல் ஒத்துக் கொண்டார். இரண்டு படங்களை தயாரித்து வரும் அவர், அதற்கிடையில் இந்த தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இந்த தொடர் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்" என்கிறார் இயக்குனர் பிரபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X