ஆர்யன்–ஸ்ரித்திகா மகளின் முதல் பிறந்தநாள் விழா.. வாழ்த்திய பிரபலங்கள் யார் யார்?

சென்னை: நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா, எஸ்எஸ் ஆர் ஆர்யன் தம்பதிகளின் மகள் லக்ஷிகாவின் முதல் பிறந்த நாள் நேற்று தடவுடலாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் விழாவில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரித்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் மதுரை To தேனீ, வேங்கை, வெண்ணிலா கபடிகுழு போன்ற போன்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரனும், மகராசி சீரியல் நடிகரான எஸ்.எஸ்.ஆர்.ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை ஸ்ரித்திகா: மலேசியாவை சேர்ந்த மாடல் அழகியான ஸ்ரித்திகா, 'கலசம்' என்கிற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலைத் தொடர்ந்து பல சீரியலில் நடித்தாலும் நாதாஸ்வரம் சீரியல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பின் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ரித்திகா கடந்த 2020 ஆம் ஆண்டு சனீஸ் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கை இரண்டே வருடத்திற்குள் கசந்து போனதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Srithika SSR Aaryan Birthday

பிறந்த நாள்: இதையடுத்து, மகாராசி சீரியலில் ஹீரோவாக நடித்த ஆரியனை ஸ்ரித்திகா காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் மற்றும் ஸ்ரித்திகா தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு லக்ஷிகா என பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஸ்ரித்திகாவின் செல்ல மகளுக்கு முதல் பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அந்த போட்டோவை ஸ்ரித்திகா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த பிறந்த நாள் விழாவில் சின்னத்திரை நடிகர்,நடிகைகள் என பலர் கலந்து கொண்டனர்.

Srithika SSR Aaryan Birthday

எஸ்.எஸ்.ஆர் ஆர்யன்: பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரனான எஸ்எஸ் ஆர் ஆர்யன், வாணி ராணி, கல்யாண பரிசு மற்றும் திருமகள் போன்ற சீரியலில் நடித்த நடிகை நிவேதிதா பங்கஜ் என்பவரை ஆரியன் முதலில் திருமணம் செய்தார். இவர்களுக்கு இடையே ஒத்துப்போகாததால், திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Read more about: birthday
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X