உங்கள் இல்லங்களை தேடிவரும் செல்ல குரல்.. இன்று முதல் உங்கள் ஜீ தமிழில்.. சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!
சென்னை: தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி. இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல்கள், விதவிதமான ரியாலிட்டி ஷோக்கள், வித்தியாசமான கேம் ஷோக்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் இன்று முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 ஒளிபரப்பாக உள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமடைந்த சரிகமப நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அக்டோபர் 20ந் தேதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டதை அடுத்து, இறுதிச்சுற்றுக்கு ஆறு போட்டியாளர்கள் தேர்வானார்கள். அதில் டைட்டில் வின்னராக மகிழன் தேர்வானார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4: முதல் ரன்னராக வடசென்னையை சேர்ந்த ஸ்வேதா, 2-வது ரன்னராக விழுப்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வீரபாண்டி தேர்வு செய்யப்பட்டனர். மக்களின் தேர்வு என்ற அடிப்படையில் மரக்காணம் சரண் நான்காவது இடத்தை பிடித்தார். சீனியர்களுக்கான சரிகமப சீசன் 4 முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இன்று முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்குபெறும் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4 ஆரம்பமாக உள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை: இந்த நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியான அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ளார். மேலும் நடுவர்களாக ஸ்ரீநிவாஸ், ஸ்வேதா, எஸ்பிபி சரண் மற்றும் சைந்தவி ஆகியோர் பங்கு பெற உள்ளனர். இன்று முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான மெகா ஆடிஷன் ஒளிபரப்பாக உள்ளது. இதில் சிறப்பு நடுவராக வைக்கம் விஜயலட்சுமி பங்கேற்க உள்ளார். இன்று ஒளிபரப்பாக உள்ள இந்த உங்கள் இல்லங்களை தேடிவரும் செல்ல குரல் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சி இலவசமாக ஜீ5 ஓடிடி தளத்தில் இலவசமாக பார்த்து மகிழலாம்.


Click it and Unblock the Notifications











