chandralekha serial: தாலி கட்டிட்டான்...இப்ப பார்த்து பொண்டாட்டி கர்ப்பம்.. என்ன கதைடா சாமி!

சென்னை: சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் லேகா டிவோர்ஸ் குடுத்துட்டான்னு, சரண்யாவை காதலிச்சு சபரி அவளை கல்யாணம் செய்துகிட்டான். இப்போ பார்த்து லேகா கர்ப்பம்னு சொல்லி வந்து நிக்கறா. யார் கூட சபரி வாழ்வான்.. கேட்கவே தலை சுத்துது... பார்த்தால்?

லேகாவின் அம்மா பெரும் தொழிலதிபர், இவங்களுக்கு மாப்பிள்ளை சபரியை பிடிக்கலை. அதனால், மகள் லேகாவிடம் சபரியை டிவோர்ஸ் பண்ணிடுன்னு வற்புறுத்தி, லேகா சம்மதிக்கலைன்னு சொன்ன உடனே தானே மகள் கை எழுத்தைப் போட்டு, டிவோர்ஸும் கிடைச்சுருது.

பெத்த மகளின் வாழ்க்கையை அம்மாவே கெடுத்த கதைதான் சந்திரலேகா சீரியல் கதை. சபரி உடனே தன்னை காதலிச்ச சரண்யாவை தானும் காதலிச்சு கல்யாணத்துக்கும் தயாராகிடறான். லேகா தான் கர்ப்பமாக இருப்பதை சொல்ல சபரியிடம் போகிறாள்.

லேகாவின் பொய்

லேகாவின் பொய்

லேகா முதலில் சபரியை கல்யாண முடிவில் இருந்து அவனை விலக போராடுகிறாள். தான் திருந்தி விட்டதாகவும், சபரியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் சொல்லிகிட்டே இருக்க. அம்மா பேச்சை இனி கேட்க மாட்டேன்னு சத்தியமும் செய்யறா. அடுக்கடுக்காய் பொய் சொல்லி வந்த லேகா, இப்போது உண்மை சொல்லியும் யாரும் நம்பலை.

 எப்படி குழந்தை

எப்படி குழந்தை

கடைசியில் லேகா முழுகாம இருக்கறது தெரிய வருது ஒரு நாள் கூட சேர்ந்து வாழலையே அப்புறம் எப்படி குழந்தைன்னு லேகா யோசிக்கும்போது சபரி குடித்துவிட்டு வந்து தன்னை அடைந்தது அப்போதுதான் லேகாவுக்கு நினைவு வருது. சபரியின் சுய நினைவு இல்லாமல் நடந்த இந்த சம்பவத்துக்கு சுய நினைவில் இல்லாமல் இருந்த புருஷன் சபரி கூட சாட்சி இல்லை. என்ன செய்து இந்த கல்யாணத்தை நிறுத்துவது என்று போராடுகிறாள் லேகா.

 இப்போ நிக்கும் அப்போ நிக்கும்

இப்போ நிக்கும் அப்போ நிக்கும்

இப்போ நிக்கும் அப்போ நிக்கும் என்று எதிர்பார்த்த சபரியின் கல்யாணம் லேகா எவ்வளவு சொல்லியும் நம்பாமல் முடிஞ்சு போச்சு. ஆனால், இந்த குழந்தைக்கு அப்பா யார்னு லேகாவின் மாமியாருக்கு தெரியும்னு கடைசியாத்தான் லேகா சொல்றா. சரி கல்யாணத்தை தடுத்து நிறுத்திருவாங்கன்னு எதிர்பார்த்தால் கல்யாணமும் முடிஞ்சு போச்சு. ஆனால், லேகாவின் வயிற்றில் வளர்வது தனது பேரக் குழந்தையாச்சேன்னு அம்மா மட்டும் அழுதுகிட்டே இருக்க, சபரி அம்மாவிடம் கேட்கும்போதுதான் அவங்க உண்மையில் அது உன் குழந்தைன்னு சொல்லிடறாங்க.

 லேகா சரண்யா

லேகா சரண்யா

இப்போ சபரி யார் கூட வாழ்வான்.. சரண்யா கழுத்தில் தாலி கட்டியாச்சு.. ஆனால், லேகா வயிற்றில் இருக்கும் குழந்தை அவனை லேகா பக்கம் ஈர்க்குது. சரண்யா கூடவாழாமல், லேகாவை சுத்தி சுத்தி வர்றான். இது என்ன டைப் கதை? இப்படி டைவர்ஸ் பண்ணின பொண்டாட்டி பின்னால் சபரி சுத்தினால், சரண்யாவின் வாழ்க்கை என்னாவது? சீரியல் எடுப்பவர்கள் தீர்வு சொல்வார்களா பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X