Tamil selvi serial:சபாஷ் தமிழ்செல்வி ஆனாலும், வேகம் கூடாது!

சென்னை:சன் டிவியின் தமிழ்செல்வி சீரியலில் தமிழ்செல்வியை உதவி வார்டன் கன்னத்துல அடிச்சுடறாங்க. எல்லாம் நகை விஷயம்தான்.

அன்னிக்கு வார்டன் நகையை உன் பேக்கில்தான் போட்டேன் அது எங்கடின்னு கேட்டுத்தான் தமிழ்செல்வியை அடிக்கறாங்க.

தமிழ்செல்வி முதலில் இல்லையென்று சொன்னாலும், நீ படிக்கணுமா வேணாமான்னு கேட்க, சாயங்காலம் குடுத்துடறேன் மேடம்னு தமிழ் செல்வி சொல்லிடறா.

கிராமத்து பொண்ணாச்சே!

கிராமத்து பொண்ணாச்சே!

தமிழ்செல்வி மேல திருட்டு பழி போடணும்னு ஹாஸ்டல் வார்டன், தன்னோட உதவி ஆள்கிட்ட நெக்லெஸைக் குடுத்து தமிழ்செல்வியின் பேக்கில்போட சொல்றாங்க.இதை தமிழ்செல்வியின் கிளாஸ் மேட் பார்த்துட்டு, எடுத்து வச்சுக்கறாங்க. வார்டன் தேடும்போது நகை கிடைக்கலை. ஆனா, தமிழ்செல்வி வார்டனின் தொலைந்து போன பர்ஸை மேடத்திடம் குடுக்கறா. அதில் வார்டன் அம்மாவின் அப்பா எழுதின கடைசி கடிதம் பொக்கிஷமாக இருந்தது கண்டு பரவசம் அடைஞ்சு தமிழ்செல்வி கிட்ட மன்னிப்பு கேட்கறாங்க. அப்போ அந்த நகை எங்கே போச்சு?

நெக்லெஸ் எங்கே

நெக்லெஸ் எங்கே

அடுத்த நாள் வார்டனின் உதவி ஆள் தமிழ்செல்வியை கூப்பிட்டு இந்த மளிகை சாமான்களை கொண்டு போய் ஸ்டோர் ரூமில் வைடின்னு சொல்றாங்க.தமிழ்செல்வியும் அவ தோழி நமீதாவும் சாமான்களை எடுத்து வச்சுட்டு போக, அந்த அம்மா தமிழ்செல்வின்னு கூப்பிடறாங்க. என்ன மேடம்னு கேட்க, ஆமாம் அந்த நெக்லெஸை உன் பேக்கில்தானே வச்சேன்.. அது எங்க போச்சுன்னு கேட்கறாங்க. எந்த நெக்லெஸ் மேடம்னு கேட்க, என்ன திமிராடின்னு கன்னத்துல பொளேர்னு அடிக்கறாங்க.

வீட்டுக்கு போகணுமா

வீட்டுக்கு போகணுமா

நீ படிக்கணுமா இல்லை வீட்டுக்கு போகணுமாடின்னு கேட்க, இல்லை மேடம் நான் படிக்கணும்... சாயங்காலம் கொண்டு வந்து குடுத்துடறேன் மேடம்னு சொல்றா. சொன்ன மாதிரி ரூமுக்கே வந்து உதவியாளர் நகையை வாங்கி தன் பேக்கில் வச்சிக்கறாங்க. கொஞ்ச நேரத்தில் தமிழ்ச்செல்வி வார்டன் ரூமுக்கு போயி, மேடம் அன்னிக்கு உங்க நெக்லெஸை பேக்கில் வைக்க சொன்னீங்கள்ல அதை அவங்க என் பேக்கில் வைக்கலை .அவங்க பேக்கில் வச்சுக்கிட்டாங்க மேடம்.இப்போகூட வருவாங்க பாருங்க அவங்க பேக்கிலிருக்கும்னு சொல்றா தமிழ்செல்வி.அதே போல இருக்க கோவமாகிடறாங்க வார்டன்.

ஆஞ்சநேயருக்கு விரதம்

ஆஞ்சநேயருக்கு விரதம்

இன்னிக்கு சனிக்கிழமை நான் ஆஞ்சநேயருக்கு விரதம் இருக்கேன்.ஆனாலும் இவளுக்கு பனிஷ்மென்ட் குடுத்தே ஆகணும். அதனால, தமிழ்செல்வி நீ அவ கன்னத்துல அடின்னு சொல்றாங்க.நான் எப்படி மேடம்னு கேட்க,நீ படிக்கணுமா வேணாமான்னு கேட்கறாங்க. படிக்கணும் மேடம். அப்படின்னா எத்தனை அடி வேணும்னாலும் அடிக்கறேன்னு சொல்றா. பொளேர் பொளேர்னு இவ அடி குடுக்க,நமீதாவும், இன்னும் ஒரு பெண்ணும் அதிர்ச்சியில் நிக்கறாங்க. இவ கிராமத்து பொண்ணுன்னு சாதாரணமா நினைச்சது தப்பா போச்சுடின்னு பேசிக்கறாங்க.

எல்லாம் ஓகேதான் தமிழ்செல்வி, அந்த உதவியாளரை அடிச்சு இருக்க வேணாம்.. வயசுல பெரியவங்க.. அவங்களை அதை செய்யத் தூண்டினவங்களே வார்டன்தானே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X