இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த சாச்சனா!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்டட் இல்லை என மூச்சுக்கு முந்நூறு தடவை 8 சீசன்களாக போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் தொகுப்பாளர்கள் சொல்லி வந்தாலும் ரசிகர்கள் அதை நம்பாமல் இருக்க காரணமே இப்படிப்பட்ட அபத்தமான விஷயங்கள் தான் என பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியையும் ரசிகர்கள் ஒரே வாரத்தில் கழுவி ஊற்ற ஆரம்பத்து விட்டனர்.
ஏற்கனவே விஜய் டிவியின் சீரியல் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டுகளை உள்ளே வைத்துக் கொண்டு இன்னொரு சீரியலாக ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில் பிக் பாஸ் நிகழ்ச்சியையே போர் அடிக்க வைத்து விட்டனர்.

இந்நிலையில், மகாராஜா படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் கலந்துக் கொள்ளவே சாச்சனாவை 24 மணி நேரத்தில் எலிமினேட் செய்கிறோம் என மோசடி செய்து தற்போது அவரை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பியிருக்கும் புதிய ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ் முதல் ப்ரோமோ: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 2வது வாரத்துக்கான ஷூட்டிங்கை இன்று சந்திக்க உள்ளார். அதற்கு முன்னதாக சாச்சனாவை உள்ளே அனுப்பி விட வேண்டும் என்கிற திட்டத்தை பிக் பாஸ் டீம் செயல்படுத்தியுள்ள ப்ரோமோவை தற்போது 5வது நாளின் முதல் ப்ரோமோவாக விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
24 மணி நேர அலப்பறை: முந்தைய சீசன்களில் போட்டியாளர்கள் ரொம்பவே இயல்பாக இருந்து பெரிதாக எதிலும் பங்கேற்காமல் இருந்தனர். ஆனால், தற்போது ஆளுக்கொரு பிஆர் டீமை வைத்துக் கொண்டு சீரியல் நடிகர்கள் என்பதால் எல்லா போட்டிகளிலும் எல்லாரும் பங்கேற்க சண்டைப் போடும் காட்சிகள் தான் அதிகம் அரங்கேறி ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறது.
பிக் பாஸ் வீட்டுக்குள் சாச்சனா: மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா 2வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நிலையில், 24 மணி நேரத்தில் முதல் ஆளாக அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நபர்கள் திட்டமிட்டு சதி செய்து சாச்சனாவை வெளியே அனுப்ப அவர் கதறி அழுது அந்த மாதிரி கோப்பையை போட்டு உடைத்து வெளியேறினார். இந்நிலையில், மீண்டும் அவரை ஒரே வாரத்துக்குள் வைல்டு கார்டாக உள்ளே அனுப்பி இஷ்டத்துக்கு பிக் பாஸ் விளையாட்டை விளையாடுகின்றனர் என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
ரஞ்சித் வெளியேற்றம்?: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ள ஜாக்குலினை ஏற்கனவே விஜய் டிவி காப்பாற்ற முயற்சிகள் செய்து வரும் நிலையில், ரவீந்தரையும் இந்த வாரம் காப்பாற்றி விடுவார்கள் என்றே தெரிகிறது. சாச்சனா உள்ளே வந்ததும் லீஸ்ட் பர்ஃபார்மன்ஸ் போட்டியாளர் என ரஞ்சித்தை ஏன் குறிப்பிட்டுள்ளார் என்றும் அவரை வெளியே அனுப்ப திட்டமிட்டுள்ளார்களா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்த வாரம் ரஞ்சித் தான் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்றும் அவரை வெளியே அனுப்பினால் இந்த சீசன் ஃபேக் பிக் பாஸ் நிகழ்ச்சியாக மாறும் என்றே ரசிகர்கள் அடிவெளுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











