Shirdi sai nana serial: ஐயோ...அப்பவே அப்படியா?.. அப்படீன்னா இப்போ?
சென்னை: சன் டிவியின் ஷீர்டி சாய் பாபா சீரியலில் அந்த காலத்திலேயே மாப்பிள்ளையை மாற்றி உட்கார வைத்து ஏமாற்றி கல்யாணம் நடத்த பார்த்து இருக்கிறார்கள். தன்னை நம்பி வரும் ஷீரடி கிராமத்து மக்களுக்கு நல்லதையே செய்து வருகிறார் சாய் பாபா.
இவரைச் சுற்றி எப்போதும், ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளுமாக இருந்து சாயிடம் நல்லதைக் கற்றுக் கொள்வார்கள். சாயும் அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்கான வாழ்வியல் முறைகளை அவ்வப்போது கற்றுத் தருவார்.
நல்ல பிள்ளைகளாக அவர்கள் வளர பல ஆலோசனைகளை சொல்வார்.குடும்பத்தில் குழப்பம், மறுமகள், மாமியார் ஒற்றுமை இல்லாமை என்று பல பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லுவார் சாய்.

மந்திர வித்தை
எப்போதுமே ஒரு ஊரில் நல்லவர்கள் என்று இருந்தால், அவரை நல்லவர் என்று ஒப்புக் கொள்ளாத கூட்டம் ஒன்று இருக்குமே. அப்படித்தான் அந்த ஊரின் பெரும் பணக்காரர் குல்கர்னி ஐயா இருப்பார். ஊர் மக்களுக்கு பணத்தை வட்டிக்கு கொடுத்து சம்பாதிப்பதில் வல்லவர். அவர் சாயை நாடோடி, மந்திர வித்தைக்காரன் என்று சொல்லி அழைப்பது வழக்கம்.

சாயின் அபிமானி
கிராமத்தில் ஜிப்ரி என்று ஒரு சிறுமி. இவளுக்கு மற்ற சிநேகிதர்கள், சிநேகிதிகளோடு, சாயை ஒரு நாள்பார்க்கவில்லை என்றாலும் தூக்கம் வராது. ஜிப்ரி அப்பா இல்லாத பெண்.விளக்கு செய்வது, ராட்டி தட்டுவது என்று அம்மாவும் பெண்ணுமாக உழைத்து குடும்பத்தை நடத்துகிறார்கள்.இவர்கள் வாழ்க்கையை வளமாக்க முயலவில்லை என்றாலும் கெடுத்து, தானும் பணம் பார்க்க முடிவு செய்து ஜிப்ரியின் அத்தை ஊரில் இருந்து வர்றாங்க.

மாப்பிள்ளை ஜிப்ரிக்கு
ஜிப்ரிக்கு நல்ல பணக்கார மாப்பிள்ளை பார்த்து இருக்கேன்.நீ எதுவும் செய்ய வேண்டாம். மாப்பிள்ளை நல்ல வசதி. உன்னையும்சேர்த்து அந்த குடும்பத்துல நல்லா பார்த்துக்குவாங்க. இதோபாரு பாதாம்,பேரீட்சை, இனிப்பு வகைகள் என்று ஜிப்ரி வீட்டில் அத்தை காமிக்கறாங்க. ஜிப்ரியின் அம்மாவுக்கும் பிடிச்சு போகுது.உடனே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடறாங்க.

தாரமாக ஜிப்ரியை
ஆனால், அந்த செல்வந்தர் தனது மகனுக்கு என்று ஜிப்ரியை காண்பித்து, தான் இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்துக்க நினைக்கிறார். பணம், நகை என்று எல்லாத்தையும் காண்பிக்க, இவர்களும் பையனுக்குத்தான் நம்ம ஜிப்ரியை கல்யாணம் செய்துக்க போறாங்கன்னு நம்பி கல்யாண ஏற்பாடுகள் நடக்குது.சாயிடம் மட்டும் ஜிப்ரி இது சரியா வருமா சாய் என்று கேட்க, பொறுத்திரு ஜிப்ரின்னு சொல்றார் சாய்.

மல்லிகை பூச்சரத்தால்
மாப்பிள்ளை முகம் காமிக்காமல் மல்லிகைச் பூச்சரத்தால் முகத்தை மூடிக்கொண்டு வர, மாப்பிள்ளை முகத்தை மறைக்கும் பழக்க வழக்கம் நம்மதில் இல்லையே என்று ஜிப்ரியின் அம்மா சந்தேகத்துடன் கேட்க, அத்தை சமாளிச்சு விடறாங்க. கடைசியில் சாய் செய்த அற்புதத்தால் மாப்பிள்ளை பையன் இல்லை, அப்பாதான் என்று தெரியுது. ஜிப்ரி காப்பாற்றப் படுகிறாள்.அப்பவே எப்படி மாப்பிள்ளையை மாத்தி ஏமாத்தி இருக்காங்க பாருங்க.


Click it and Unblock the Notifications











