கேப்டன் டிவியில் சாய்பாபா தொடர்...
கேப்டன் தொலைக்காட்சியில் பகவான் சாய்பாபாவைப் பற்றி புராணத் தொடர் ஒளிபரப்பாகிறது.
புராண தொடர்களை ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சிகள் அதிக ஆர்வம் காட்டுகிறது. காரணம் மக்கள் அதற்கு அளித்து வரும் அமோக ஆதரவு.
மகாபாரத தொடரை இரண்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகிறது.
நாயன்மார்கள் வரலாற்றை இரண்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றது. அந்த வரிசையில் இப்போது கேப்டன் டி.வியும் இணைந்திருக்கிறது.

சாய்பாபா தொடர்
ஷீரடி ஜெய் சாய்பாபா என்ற பக்தி வரலாற்று நிகழ்ச்சியை கேப்டன் டிவி ஒளிபரப்புகிறது.

பாபாவின் அருள்
பல்வேறு துன்பங்களில் கிடந்து தவிக்கும் மக்களை பகவான் சாய்பாபாவின் அருள் எப்படி அதிலிருந்து மீட்கிறது என்கிற கதைகள் ஒளிபரப்பாகின்றன.

பாபா சொன்ன ஹரி கதைகள்
சாய்பாபாவின் வரலாற்று கதையும் இணைத்து சொல்லப்படுகிறது. அதனுடன் பாபா சொன்ன ஹரி கதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கேப்டன் டிவியில்
சாய்பாபாவாக ஸ்ரீநிவாச ரெட்டி நடிக்கிறார். மனோரமா, சுபலேகா சுதாகர், சுமன், சத்யப்பரியா, விஜய் பாபு ஆகியோரும் நடிக்கிறார்கள். கேப்டன் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











