இந்த வாரம் சீக்ரட் ரூமுக்குள் போகப்போவது இவரா?
Recommended Video
சென்னை: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் சீக்ரட் ரூமுக்குள் போகப்போவது இவர்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் வாரம்தோறும் நாமினேஷன் அதனை தொடர்ந்து எவிக்ஷன் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டின் சீக்ரட் ரூமை அறிமுகப்படுத்தி பேசினார்.
இதனைத்தொடர்நது மீராதான் சீக்ரட் ரூமுக்கு அனுப்பப்பட்டு காப்பாற்றப்படுவார் என கூறப்பட்டது. இதனால் கடுப்பாகினர் மக்கள். இந்நிலையில் இந்த வாரத்தின் நாமினேஷன் இன்று நடைபெறுகிறது. அதுவும் ஓபன் நாமினேஷன். இதில் யார், யாரை நாமினேட் செய்யப்போகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்துவிடும்.

ஒரே நாளில் மாறிய ஓட்டு
தற்போது வரை மீராவுக்குப் பிறகு மக்கள் அதிகமாக வெறுப்பது சாக்ஷியைதான். ஒரே இரவில் மீரா, சேரன் மீது அபாண்ட குற்றச்சாட்டைக் கூறி பெயரைக் கெடுத்துக்கொண்டார். ஒரே நாளில் ஒட்டு மொத்த தமிழ்நாடும் மீராவுக்கு எதிராக மாறிவிட்டது.

தப்பித்த சாக்ஷி
இதனால் எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டார் சாக்ஷி. பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகிறது.

சீக்ரட் ரூம் யாருக்கு?
இதில் ஒருவேளை சாக்ஷி அதிகம் நாமினேஷன் செய்யப்பட்டு எவிக்ஷன் லிஸ்ட்டுக்கு வந்தால் அவரை தான் சீக்ரட் ரூமுக்கு அனுப்ப பிக்பாஸ் திட்டமிட்டுள்ளாராம். சீக்ரட் ரூமில் இருந்தபடியே சாக்ஷி, ஹவுஸ்மேட்ஸ்களை புரிந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.

சாக்ஷியை வெறுக்கும் கவின்
சாக்ஷியை காதலிக்கும் கவினே அவரின் பெயரை கடந்த வாரம் நாமினேட் செய்தார். ஆகையால் கவினும் சாக்ஷி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றே விரும்புகிறார்.

கவின் எதிர்பார்ப்பு
லாஸ்லியாவுடன் கவின் நெருங்கிப்பழகுவது சாக்ஷிக்கு பிடிக்காததால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினால் நல்லா இருக்கும் என எதிர்பார்க்கிறார் கவின். அதற்காகவே அவரது பெயரை நாமினேட் செய்தார்.

சாக்ஷிக்கு வாய்ப்பு
ஒரு வேளை சாக்ஷி வெளியே சென்றால், கவின் லாஸ்லியா இடையேயான நெருக்கம் இன்னும் அதிகரிக்கும். எந்த இடையூறும் இல்லாமல் லாஸ்லியாவுடன் காதல் விளையாட்டை தொடருவார் கவின். இவற்றை பார்த்து கவினை பற்றி புரிந்துகொள்ள சாக்ஷிக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications











