அபிராமி பயந்தது மாதிரியே கவின கரெக்ட் பண்ணிடுச்சே இந்த பொண்ணு! கமுக்கமாக காரியத்தை சாதித்த சாக்ஷி!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 12: Promo 1: காதலிக்கும் பையன் சொல்வதை கவனிப்பேன் Sakshi- வீடியோ

சென்னை: அபிராமி பயந்தது போலவே சாக்ஷி கவினை கரெக்ட் செய்து கவிழ்த்து விட்டார்.

விஜய் டிவியில் கடந்த 23 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் முதலில் 15 பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.

அடுத்த 2 நாட்களுக்குப் பிறகே மீரா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்திற்குள்ளேயே அபிராமி, கவின் மீது தனக்க காதல் என சாக்ஷியிடம் தான் முதலில் கூறினார்.

பிட் போட்ட அபிராமி

பிட் போட்ட அபிராமி

பின்னர் ஷெரினிடம் தனது காதலை பற்றி கூறினார் அபிராமி. எங்கு கவினுக்கு போட்டி வந்துவிடுமோ என்ற பயத்தில்தான் அபிராமி வந்த முதல் நாளே கவினுடன் காதல் என்ற பிட்டை போட்டு வைத்தார்.

கழன்டுகொண்ட கவின்

கழன்டுகொண்ட கவின்

அடுத்த இரண்டு நாட்களில் கவினிடம் அபிராமி தனது காதலை கூறினார். ஆனால் கவின் முதலில் பழகி பாருங்கள் பின்னர் சொல்லுங்கள் என்று கழன்டுகொண்டார்.

மூன்று பேருக்கு ரூட்டு

மூன்று பேருக்கு ரூட்டு

இருப்பினும் அபிராமியிடம் பிரியமாகதான் இருந்தார். அதேநேரத்தில் சாக்ஷி மற்றும் லாஸ்லியாவுக்கும் ரூட்டு போட்டு வந்தார் கவின். இதனால் அவர் யாரை காதலிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

பொட்டு வைத்த கவின்

பொட்டு வைத்த கவின்

சாக்ஷிக்கு கவின் மீது ஒரு கண் இருந்தது, கடந்த எபிசோடுகளில் அவர் கவினை பார்த்த பார்வையிலேயே தெரிந்தது. இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் கவின், பொட்டு வைக்காமல் வந்த சாக்ஷிக்கு தன் கையாலேயே பொட்டு வைத்து விடுகிறார்.

காதலை சொல்லிக்கொள்ளும் ஜோடி

காதலை சொல்லிக்கொள்ளும் ஜோடி

பின்னர் லிவிங் ஏரியாவில் அமர்ந்து தனிமையில் கவினும் சாக்ஷியும் பேசுகின்றனர். அப்போது இருவரும் தங்களின் காதலை பகிர்ந்து கொள்கின்றனர்.

உனக்கு தெரியவில்லையா தத்தி

உனக்கு தெரியவில்லையா தத்தி

என்னுடைய ட்ரீம் பாய்க்கான அனைத்தும் உன்னிடம் உள்ளது என சாக்ஷியும் நான் கல்யாணம் செய்துகொள்ளும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்து பாயின்ட்டுகளிலும் நீ ஏற்கனவே வந்துவிட்டாய், இது உனக்கு தெரியவில்லையா தத்தி என செல்லமாக திட்டியபடி கவினும் கொஞ்சி பேசுகின்றனர்.

காரியத்தை சாதித்த சாக்ஷி

காரியத்தை சாதித்த சாக்ஷி

ஏற்கனவே மீராவை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பற்றவைத்து பிக்பாஸ் வீட்டில் பிரளயத்தை உண்டு பண்ணியவர் இந்த சாக்ஷி. தனது ஃபிரன்டான அபிராமி கவினை காதலிக்கிறார் என தெரிந்தும் கமுக்கமாக இருந்து ஏற்கனவே கவின் மீது காதல் இருந்ததை தெரிவித்து காரியத்தை சாதித்துக்கொண்டார் சாக்ஷி.

போட்ட பிட்டு வேஸ்ட்

போட்ட பிட்டு வேஸ்ட்

எது எப்படியோ அபிராமி பயந்தது போலவே நடந்துவிட்டது. முந்திக்கொண்டு கவினுக்காக அபிராமி போட்ட பிட்டு வேஸ்டாய் போய்விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X