பிக்பாஸ் வீட்டில் கொல்லப்பட்ட சாக்ஷி, மோகன் வைத்யா! கொலைக்காரி வனிதாதான்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Highlights : TASK-ஆல் ஏற்பட்ட மனக்கசப்பு,மோதிக்கொள்ளும் சாக்ஷி- அபி-வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டில் சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 பிரபலங்களில் ஃபாத்திமா பாபு நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டார். எஞ்சியுள்ள 15 போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் டாஸ்க் கொடுத்துள்ளார்.

அதாவது பிக்பாஸ் வீட்டில் இரண்டு கொலையாளிகள் நுழைந்திருப்பதாகவும் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக போட்டியாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வனிதாவுக்கு டாஸ்க்

வனிதாவுக்கு டாஸ்க்

பிக்பாஸ் வீட்டின் கொலையாளிகளாக வனிதாவையும் முகெனையும் அறிவித்துள்ளார் பிக்பாஸ். குறிப்பாக இந்த டாஸ்க் வனிதாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வனிதாவின் கூட்டாளியாக முகென் உள்ளார்.

சாக்ஷியை கொல்ல உத்தரவு

சாக்ஷியை கொல்ல உத்தரவு

கொலைகளை வெற்றிகரமாக நிகழ்த்தி முடிக்க வனிதாவுக்கு என செல்போன் ஒன்றையும் கொடுத்துள்ளார் பிக்பாஸ். டாஸ்க்கின் முதல் நாளான நேற்று சாக்ஷியின் மேக்கப்பை கலைத்தால் அவர் கொல்லப்பட்டதாக அர்த்தம் என கூறும் பிக்பாஸ் அவரை சாக்ஷியை கொலை செய்ய உத்தரவிடுகிறார்.

சாக்ஷியை கொன்ற வனிதா

சாக்ஷியை கொன்ற வனிதா

அதன்படி ஹாலோவின் மேக்கப் போடலாம் என சாக்ஷியை அவரது கையாலேயே மேக்கப்பை அழிக்க வைத்த வனிதா பேய் மேக்கப்பை போட்டு விடுகிறார். இதைத்தொடர்ந்து ஹவுஸ் மேட்ஸிடம் பேசிய பிக்பாஸ் சாக்ஷி இறந்துவிட்டதாகவும் அவரை சகல மரியாதையுடன் மயானத்தில் கொண்டு வைக்குமாறும் கூறுகிறார்.

பேய் டிரெஸில் சாக்ஷி

பேய் டிரெஸில் சாக்ஷி

பின்னர் பேய் டிரெஸில் மயானத்தில் கொண்டு போய் விடப்படுகிறார் சாக்ஷி. இதைத்தொடர்ந்து அடுத்த கொலைக்கு உத்தரவிடுகிறார் பிக்பாஸ். அதாவது மோகன் வைத்யாவை கொலை செய்ய வேண்டும் என கூறுகிறார் பிக்பாஸ்.

கொல்லப்பட்ட மோகன் வைத்யா

கொல்லப்பட்ட மோகன் வைத்யா

மோகன் வைத்யாவை மைக்கெல் ஜாக்சன் டான்ஸ் ஆட வைப்பதன் மூலம் அவரை கொலை செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கிறார். இதைத்தொடர்ந்து அவரும் மயானத்தில் சாக்ஷிக்கு கம்பெனியாக உள்ளார்.

இன்றும் தொடரும்

இன்றும் தொடரும்

முதல் நாளில் பிக்பாஸ் வீட்டில் 2 பேர் கொல்லப்பட்ட நிலையில் நேற்று தற்காலிகமாக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2வது நாளான இன்று யார் கொலை செய்யப்படுவார்கள் என்பது தெரியவரும்.

வனிதாவை காப்பாற்ற

வனிதாவை காப்பாற்ற

இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்ட்டில் வனிதாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படி ஒரு டாஸ்க்கை வனிதாவுக்கு கொடுத்து, டாஸ்க்கை சரியாக செய்து முடிக்கும் நிலையில் வனிதா எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்படுவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X