அவளுக்கு ஏன் சாக்லெட் கொடுத்த? என் ஃபீலிங்ஸோட விளையாடத.. கவினுடனான காதலை முறித்துக்கொண்ட சாக்ஷி!
Recommended Video
சென்னை: நமக்குள் இனி எதுவும் இல்லை இதோடு உன் விளையாட்டை நிறுத்திக்கொள் என கவினுடனான காதலை சாக்ஷி முறித்துக்கொண்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் எப்போதும் அங்குள்ள பெண்கள் பின்னாடியே சுற்றி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே, அபிராமி, சாக்ஷி, ஷெரின், லாஸ்லியா என அவர்கள் பின்னாலேயே சுற்றி வந்தார் கவின்.
திருமணம் ஆன பெண்களான மதுமிதா, ரேஷ்மா, வனிதா ஆகியோரிடம் எட்டியே இருந்தார். மேலும் அபிராமி, ஷெரின், சாக்ஷி வனிதா ஆகியோருக்கு பிடிக்காது என்ற ஒரே காரணத்திற்காக மதுமிதாவிடம் சண்டை போட்டு அவரிடம் பேசாமலே இருந்தார் கவின்.

அபிராமியுடன் நெருக்கம்
பின்னர் அபிராமி கவினிடம் காதலை சொன்னார். அதனை ஏற்க மறுத்தார் கவின். ஆனாலும் அபிராமியுடனான நெருக்கம் மட்டும் குறையவே இல்லை.

சாக்ஷியுடன் காதல்
அடுத்த சில நாட்களிலேயே சாக்ஷியுடன் நெருக்கம் காட்டிய கவின் அவர் மீது காதல் கொண்டார். சாக்ஷியும் கவினும் கடந்த வாரத்தில் ஒரு நாள் பரஸ்பரம் காதலை புரபோஸ் செய்து கொண்டனர்.

லாஸ்லியாவுடன் நெருக்கம்
பரஸ்பரம் காதலை சொல்லிக்கொண்ட பின்னரும் அடங்காத கவின், லாஸ்லியாவிடம் நெருங்கி பழகினார். கவின் லாஸ்லியாவிடம் நெருங்கி பழகுவது சாக்ஷிக்கு பிடிக்கவில்லை.

காதல் பிரேக்கப்
இதுதொடர்பாக கடந்த வாரம் சாக்ஷி கவினிடம் சண்டைபோட்டார். இதைத்தொடர்ந்து கவின் ஃபிரன்ட்ஸ் என சாக்ஷியை சமதானப்படுத்தினார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நடந்த விவகாரத்தால் சாக்ஷி கவினுடனான காதலை முறித்துக்கொண்டார்.

தவறாக புரிந்துகொண்ட சாக்ஷி
அதாவது கவின் தன்னுடைய சாக்லெட்டை லாஸ்லியாவுக்கு கொடுத்தார். அதற்கு முன்னதாக சாக்ஷி கவினுக்கு ஒரு சாக்லெட் கொடுத்திருந்தார். சாக்ஷி கொடுத்த சாக்லெட்டைதான் லாஸ்லியாவுக்கு கொடுத்ததாக நினைத்துக்கொண்டார் சாக்ஷி.

சாக்ஷி கோபம்
இதனால் காண்டான சாக்ஷி, லாஸ்லியாவுக்கு சாக்லெட் கொடுத்தியா என கேட்கிறார் ஆமாம் என கவின் சொல்ல, ஓகே ஃபைன் என கூறிவிட்டு கோபமாக சென்றுவிட்டார். பின்னாடியே மச்சான் மச்சான் என சென்ற கவின், சாக்ஷியை சமாதானப்படுத்த முயல்கிறார்.

சீன் போடாதே
கவின் பேசுவதை கேட்க தயாராக இல்லாத சாக்ஷி, என்னை தனியாக விடு, சீன் கிரியேட் செய்யாதே என்று திரும்ப திரும்ப கூறினார். பின்னர் டைனிங் டேபிளில் உட்காந்து சாப்பிட்டு கொண்டிருந்தார் சாக்ஷி.

எல்லாம் முடிந்துவிட்டது
அங்கேயும் வந்து கவின், சாக்ஷியை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் எதையும் காதில் வாங்க தயாராக இல்லாத சாக்ஷி, என் உணர்வுகளுடன் விளையாடாதே, எல்லாத்தையும் இதோடு நிறுத்திக்கொள். எல்லாம் முடிந்து விட்டது. இனிமே நான் உன்னிடம் பேச மாட்டேன். என்று கூறி கவினுடனான தனது காதலை முறித்துக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











