பிக்பாஸிலிருந்து வெளியேறினார் சாக்ஷி.. மொத்தமா வச்சு செய்த கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சாக்ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சாக்ஷி அகர்வால் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார். இதன் காரணமாக அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.
சாக்ஷியை சினேக்ஷி, பாய்சன், விஷம் என்றும் ரசிகர்கள் பட்டப் பெயர் வைத்து கலாய்த்து வந்தனர். முதல் வாரம் முதலே சாக்ஷி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டி வந்தனர்.

தப்பிய சாக்ஷி
ஆனால் வாரம் தோறும் ஏதோ ஒரு காரணத்தினால் சாக்ஷி எவிக்ஷனில் இருந்து தப்பித்து வந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே சாக்ஷி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அப்போதும் தப்பித்தார்
ஆனால் தனது பொய் குற்றச்சாட்டால் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் மீரா மிதுன். இதனால் அந்த வாரம் மீரா வெளியேறிவிட்டார். அதனால் அப்போதும் சாக்ஷி தப்பித்துவிட்டார்.

டிவிஸ்ட் வைத்த பிக்பாஸ்
கடந்த வாரம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரேஷ்மாவை வெளியேற்றி டிவிஸ்ட் வைத்தார் பிக்பாஸ். இந்நிலையில் இந்த வாரம் சாக்ஷிதான் வெளியேற்றப்படுவார் என சனிக்கிழமை முதலே அரசல்புரசலாக தகவல் வெளியானது.

சாக்ஷி குறும்படம்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் சாக்ஷி வெளியேற்றப்பட்டது ஒளிபரப்பப்பட்டது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்ஷி கமலை மேடையில் சந்தித்தார். அப்போது குறும்படமாக இதுவரை சாக்ஷி பிக்பாஸ் வீட்டில் இருந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

காதல் மொழிகள்
அதில் சாக்ஷியின் சாக்லேட் சம்பவங்கள், கவினுடனான காதல் மொழிகள், காதல் சண்டைகள் உள்ளிட்ட அனைத்தும் ஒளிபரப்பப்பட்டது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறு பவர்களுக்கு சந்தோஷமான வீடியோதான் ஒளிபரப்பப்பட்டது.

வச்சு செய்த பிக்பாஸ்
ஆனால் சாக்ஷி மேடையில் இருக்கும்போதே அவர் செய்த விஷமத்தனங்களும் அவரது பெற்றோர் முன்னால் ஒளிபரப்பப்பட்டது. இதனால் நெருடலுக்கு ஆளானார் சாக்ஷி. இதனை பார்த்த ரசிகர்கள் கடைசியில் வச்சு செய்து அனுப்பிவிட்டார் பிக்பாஸ் என்று கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











