இந்த வாரம் வெளியேற போறது அவங்கதானாம்! மனசு வலிக்குது அவ்வா அவ்வா.. மனசு துடிக்குது அவ்வா.. அவ்வா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது யார் என்பது தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர் சாக்ஷி. ஆரம்பத்தில் இருந்தே யாராவது ஏதாவது பேசினால் அதனை ஒட்டுக்கேட்டுவிட்டு அரைகுறையாக பேசி பிரச்சனையாக்குவது சாக்ஷிக்கு கை வந்த கலை.
ஆரம்பத்தில் முகென் மீராவிடம் பேசியதை ஒட்டுக்கேட்டு விட்டு உள்ளே போய் கொளுத்தி போட்டார். இதனால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரளயமே வெடித்தது.

கவினை மடக்கினார்
இதைத்தொடர்ந்து மதுமிதா விஷயத்திலும் பயங்கரமாக பேசி சண்டைபோட்டார் சாக்ஷி. அபிராமி கவினை காதலிக்கிறார் என தெரிந்தும் கவின் மீது காதல் கொண்டு அவரை தன் பக்கம் இழுத்தார்.

பின்னால் பேசும் சாக்ஷி
ரேஷ்மாவுடன் க்ளோஸாக இருந்தபோதும், அவர் குறித்து பின்னால் பேசினார். பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரைப் பற்றியும் பின்னால் பேசியிருக்கிறார் சாக்ஷி.

குறும்படம் போட்ட கமல்
மீராதான் மீட்டிங் அரெஞ்ச் செய்ய சொன்னார் என்று கூறி மீரா மீது ஹவுஸ்மேட்ஸ்களுக்கு வெறுப்பு வரும்படி செய்தார். ஆனால் குறும்படம் போட்டு சாக்ஷியின் முகத்திரையை கிழித்தார் கமல்.

காப்பாற்றப்பட்ட சாக்ஷி
வாரந்தோறும் சாக்ஷி நாமினேஷனுக்கு வந்து விடுகிறார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அவர் இதுவரை காப்பாற்றப்பட்டு வந்தார்.

மீராவின் பொய் புகார்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே சாக்ஷி வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீரா, சேரன் மீது பொய் புகாரை கூறி தானாக ஆப்பு வைத்துக்கொண்டு வெளியேறிவிட்டார்.

தப்பித்த சாக்ஷி
மீரா சேரன் மீது அப்படி ஒரு புகாரை கூறாமல் இருந்திருந்தால் நிச்சயம் அந்த வாரமே சாக்ஷி வெளியேற்றப்பட்டிருப்பார். ஆனால், மீராவின் கெட்ட நேரமா, சாக்ஷியின் நல்ல நேரமா என்று தெரியவில்லை சாக்ஷி தப்பித்துவிட்டார்.

நீதான்டா ஃபூலு
கடந்த வாரமும் சாக்ஷிதான் வெளியே போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரேஷ்மா வெளியேறிவிட்டார். சேரனை நீதான்டா ஃபூலு என்று கூறியதால் அவருக்கு வோட்டுகள் விழவில்லை என கூறப்பட்டது.

நம்ப தகுந்த தகவல்
இந்நிலையில் இந்த வாரம் சாக்ஷி வெளியேற்றப்படுவதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இன்று இரவு வரை பொறுத்திருப்போம் அதிகாரப்பூர்வ தகவலுக்காக.


Click it and Unblock the Notifications











