மறுபடியும் முதலில் இருந்தா, இப்பவே கண்ணை கட்டுதே: நீங்க திருந்த மாட்டீங்களா பிக் பாஸ்
Recommended Video
சென்னை: போன வாரம் பார்வையாளர்களை கதறவிட்டது போதாது என்று மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்துள்ளார் பிக் பாஸ்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வனிதா வெளியேறிய பிறகு ரொம்பவே போர் அடிக்கிறது என்று பார்வையாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் கடந்த வாரம் இந்த கவின், லாஸ்லியா, சாக்ஷியையே மீண்டும் மீண்டும் காட்டி கடுப்பேற்றினார்கள்.
ஏதோ பிக் பாஸ் வீட்டில் அந்த 3 பேர் மட்டும் தான் இருப்பது போன்று நடந்து கொள்கிறார்கள்.
சாக்ஷி
கவின், சாக்ஷி, லாஸ்லியாவை தயவு செய்து மீண்டும் காட்டி எங்கள் உயிரை வாங்காதீர்கள் பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் கவின் சாக்ஷியை பார்த்து நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது என்று பாட அந்தம்மா வெட்கப்பட எங்களால் சத்தியமாக முடியல பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கதறுகிறார்கள்.

லாஸ்லியா
கடந்த வாரத்துடன் இந்த வீணாப் போன கவின், சாக்ஷி, லாஸ்லியா முக்கோண காதல் கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால் அதை தான் இந்த வாரமும் காட்டப் போகிறீர்களா என்று ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் பிக் பாஸை கெட்ட, கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். பார்வையாளர்களை கடுப்பேற்றி பார்ப்பதில் தான் இந்த பிக் பாஸுக்கு என்ன ஒரு சந்தோஷம்.
முடியல
கடலை பார்ட்டி கவினும் திருந்துவதாக இல்லை, பிக் பாஸும் திருந்துவதாக இல்லை. கவின், சாக்ஷி, லாஸ்லியா ஆகியோரின் முக்கோண காதலை பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் கடந்த வாரம் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். ஒரு வாரமாக அவர்கள் திட்டியதை பார்த்தும் திருந்தாமல் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறாரே இந்த பிக் பாஸ்.

சாக்ஷி
கவினை கூட சகித்துக் கொள்வோம் ஆனால் இந்த போலி பாம்பு சாக்ஷியை பார்க்க முடியவில்லை பிக் பாஸ் . தயவு செய்து அவரை இந்த வாரம் வெளியேற்றிவிட்டால் உங்களுக்கு கோடிப் புண்ணியமாக போய்விடும். அப்படியே வனிதா அக்காவை ஒயில்டு கார்டு மூலம் அழைத்து வாங்க. ஆலியா மானசா வந்தாலும் ஓகே தான் என்கிறார்கள் பார்வையாளர்கள்.


Click it and Unblock the Notifications











