அதிகரிக்கும் மோதல்.. முதல் முறையாக கவினை நாமினேட் செய்த சாக்ஷி.. என்னலாம் நடக்கப்போகுதோ!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கவினை முதல் முறையாக சாக்ஷி நாமினேட் செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் வாரம் தோறும் சக ஹவுஸ் மேட்ஸ்களாகல் நாமினேட் செய்யப்பட்டு ஒவ்வொருவராக வெளியேற்றப்படுகின்றனர். இன்று திங்கள் கிழமை என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் புராசஸ் இன்று தொடங்கியுள்ளது.
இதுவரை கன்ஃபெஷன் ரூமில் மறைமுகமாக நடைபெற்று வந்த நாமினேஷன் இன்று ஓபனாக நடைபெறுகிறது. தற்போது நாமினேஷன் தொடர்பான புரமோ ஒன்று வெளியாகியுள்ளது.

கவின் பெயர்
அதன்படி, கவின் பெயரை சாக்ஷி முதல் முறையாக நாமினேட் செய்துள்ளார். கடந்த வாரம் கவின், சாக்ஷி பெயரை நாமினேட் செய்த நிலையில் இந்த வாரம் சாக்ஷி கவின் பெயரை நாமினேட் செய்துள்ளார்.

கவின், லாஸ்லியா விருப்பம்
முதலில் சாக்ஷியை காதலிப்பதாக கூறிய கவின் பின்னர் லாஸ்லியாவுடன் நெருக்கமாகிவிட்டார். லாஸ்லியாவும் கவினையே சுற்றி சுற்றி வருகிறார். இதனால் இருவரும், சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என நினைக்கின்றனர்.

சாக்ஷி நாமினேஷன்
முதல் புரமோவில் லாஸ்லியா, சாக்ஷியை நாமினேட் செய்தார். தற்போது சாக்ஷி கவினை நாமினேட் செய்துள்ளார். சில விஷயங்களை கவின் ஓபனாக பேசியிருக்கலாம் என்று கூறுகிறார் சாக்ஷி.

பிட்டை போட்ட கவின்
இதைத்தொடர்ந்து தனது நண்பர்களுடன் நாமினேஷன் குறித்து பேசும் கவின், சாக்ஷி தன்னுடன் ஏற்கனவே பேசியதை கூறுகிறார். மேலும் சாக்ஷி தன் பெயரை கூறிய போதும் கூட தனக்கு சாக்ஷியின் பெயரை கூற தோன்றவில்லை என நல்லவர் போல் பிட்டை போட்டார் கவின்.

நல்ல காதல்டாங்கப்பா
கவின் கடந்த வாரமே யாரும் எதிர்பாராத வகையில் சாக்ஷியின் பெயரை நாமினேட் செய்தார். அதை மறந்துவிட்டார் போல கவின், தற்போது நல்லவர் போல அனுதாபத்தை தேட பார்க்கிறார் கவின். நல்ல காதல்டாங்கப்பா!


Click it and Unblock the Notifications











