For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொண்ணுங்கன்னா டிரெஸ் மாத்துற மாதிரி மாத்திடுவியா கவின்? நறுக் என கேட்கும் சாக்ஷி! வைரல் வீடியோ!

    |
    Sakshi Emotional speech about kavin

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய சாக்ஷி கவின் குறித்து பரபர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சாக்ஷியும் கவினும் காதலித்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது வாரத்திலேயே கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே காதல் மலர்ந்தது.

    கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசினர். அப்போது தான் திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் ஆணுக்கான பாயிண்ட்டுகளை கூறியபோதே நோட்டட் என்று கூறினார் சாக்ஷி. தான் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணிடம் எதிர்பார்த்த பாயிண்ட்டுகள் இருப்பதாக சாக்ஷியிடம் கூறிய கவின், அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன், உனக்குதான் புரியவில்லை தத்தி என்றார்.

    சேரனுக்கு 'மதினி' ஆன வனிதா.. இப்பவும் கவின்-லாஸ் காதல்தான் வத்திகுச்சியோட டார்கெட்.. யூ டூ ஷெரீன்! சேரனுக்கு 'மதினி' ஆன வனிதா.. இப்பவும் கவின்-லாஸ் காதல்தான் வத்திகுச்சியோட டார்கெட்.. யூ டூ ஷெரீன்!

    சாக்ஷி சீரியஸ்

    இப்படிதான் நமக்கு அவர்களின் காதல் குறித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் வனிதா, கவினிடம் அவரது காதல் விளையாட்டுகள் குறித்து கேட்டார். அப்போது பேசிய கவின், தான் விளையாட்டாக பழகியதை சாக்ஷி ஏதோ சீரியஸாக எடுத்துக்கொண்டு காதலித்ததாக கூறினார்.

    சாக்ஷி வீடியோ

    சாக்ஷி வீடியோ

    மேலும் தற்போது தான் சீரியஸாக தனது எதிர்காலத்திற்கும் சேர்த்தே யோசித்து விளையாடுவதாகவும் இது விளையாட்டல்ல என்றும் கூறினார் கவின். இந்நிலையில் கவினின் இந்த எபிசோடை பார்த்த சாக்ஷி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    யார் புரபோஸ் பண்ணது?

    யார் புரபோஸ் பண்ணது?

    அதில் தனக்கு மூன்று கேள்விகள் உள்ளது. முதலில் யார் யாருக்கு புரபோஸ் பண்ணுனது என்று எனக்கு தெரிந்தாக வேண்டும். கவின் முதலில் எனக்கு புரபோஸ் பண்ணினானா அல்லது அவனுக்கு நான் புரபோஸ் பண்ணினேனா என்பது தெளிவாக வேண்டும். இந்த விஷயம் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரியும். ஆனால் ஆடியன்ஸ்க்கு எந்தளவுக்கு தெரிந்திருக்கிறது என்று தெரியவில்லை. இது எனக்கு முதல் கேள்வி

    சும்மாவா கத்துனீங்க?

    சும்மாவா கத்துனீங்க?

    இரண்டாவது கேள்வி, கவின் பாத்ரூமில் இருக்கும்போது அந்த மொழிப் பிரச்சனையின் போது என்னிடம் கத்தினார். சாவடிச்சுறுவேன், அது இது என்று கத்தினார். இந்த உரிமையுடன் அவர் வனிதாவிடமோ மதுமிதாவிடமோ அவரால் கத்த முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதன் பிறகும் கூட நான் அவரை மன்னித்தேன். அந்தளவுக்கு என்னிடம் உரிமை எடுத்துக்கொண்டார். எல்லோரிடமும் அந்த உரிமையை எடுக்க முடியுமா? எங்களிடையே அப்படி ஒரு பாண்டிங் இருந்தது.

    வாழ்க்கை என்று நினைத்தேன்

    வாழ்க்கை என்று நினைத்தேன்

    மூன்றாவது கேள்வி என்னவென்றால் நான் கல்யாணம் செய்துகொள்ளும் பெண்ணிற்கான நான்கு பாய்ன்ட்டுகளில் நீ ஏற்கனவே வந்துவிட்டாய் என்றார். ஷெரினிடம் பேசும்போது கூட சாக்ஷி என் வீட்டில்தான் இருக்கப்போகிறார். நீ சாக்ஷியை மீட் பண்ண வேண்டும் என்றால் என் வீட்டிற்குதான் வரவேண்டும் என்று கூறினார். இப்படி கல்யாணம் வரை பேசிவிட்டு இப்போது என் மீது குற்றச்சாட்டுக்களை கூறுகிறார். நான் கேம் ஏதும் விளையாடவில்லை. என் வாழ்க்கையாக நினைத்துதான் வாழ்ந்தேன் என்று கூறியுள்ளார் சாக்ஷி.

    லாஸ்லியாவுக்கு தெரியும்

    லாஸ்லியாவுக்கு தெரியும்

    மேலும் தனக்கு எதுவும் தெரியாது என லாஸ்லியா கூறுவது பொய் என்ற சாக்ஷி, ஜெயிலில் இருக்கும்போதே எல்லாத்தையும் கூறிவிட்டேன். ஆனால் லாஸ்லியா எதுவும் தெரியாது என பொய் சொல்கிறார். அவர் சொல்வது உண்மையில்லை என்றும் சாக்ஷி கூறினார்.

    பொண்ணுங்க என்ன டிரெஸா?

    பொண்ணுங்க என்ன டிரெஸா?

    மேலும் கவினையும் விளாசியிருக்கிறார் சாக்ஷி, பொண்ணுங்கன்னா ஈஸியா டிரெஸ் மாத்துற மாதிரி மாத்திடுவியா கவின். ஆனா பொண்ணுங்க நாங்க அப்படி கிடையாது என்று வேதனையுடன் பேசியுள்ளார் சாக்ஷி. சாக்ஷியின் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Sakshi has raised question to Kavin. Sakshi Video goes viral on Social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X