மக்கள் நாய்களா.. சாக்ஷியின் அதிகப்பிரசங்கிதனமான பேச்சு.. மன்னிப்பு கேட்க சொல்வாரா பிக்பாஸ்?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 75 : Losliya angry over sakshi

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் விருந்தாளியாக நுழைந்துள்ள சாக்ஷி மக்களை நாய்கள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சாக்ஷி கடந்த சில வாரங்களுக்கு முன்பு எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அனைத்தையும் அரைகுறையாக கேட்டுவிட்டு சண்டை மூட்டி விட்டு வந்தார்.

பிக்பாஸ் வீடு ரணகளமாக வனிதா ஒரு காரணம் என்றால் ஹவுஸ்மேட்ஸ்களுக்குள் சண்டை வர சாக்ஷி முக்கிய காரணமாக இருந்தார். இதனால், அவரை ஸ்னேக்ஷி பாய்சன், விஷம் என்றும் வர்ணித்து வந்தனர் பார்வையாளர்கள்.

கவினை விளாசிய சாக்ஷி

கவினை விளாசிய சாக்ஷி

மீரா மிதுனால் எவிக்ஷனில் இருந்து தப்பி வந்த சாக்ஷி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். வெளியேறிய பிறகு, எபிசோடுகளை பார்த்து கவினை விளாசி வீடியோ வெளியிட்டார்.

நேற்றைய எபிசோடு

நேற்றைய எபிசோடு

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது விருந்தாளியாக மீண்டும் நுழைந்திருக்கிறார் சாக்ஷி. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஷெரினுக்கும் வனிதாவுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றது.

அழுத ஷெரின்

அழுத ஷெரின்

அப்போது, வனிதா ஷெரினுக்கு தர்ஷன் மீது அஃபேர் என்று கூறிய வார்த்தையால் கொந்தளித்தார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பப்ளிக் இந்த வார்த்தையை கேட்டு என்னை பற்றி என்ன பேசுவார்கள் என்று கூறி அழுதார்.

குரைக்கும் நாய்கள்

குரைக்கும் நாய்கள்

அப்போது அவரை சமாதானப்படுத்திய சாக்ஷி, ரோட்டில் குரைக்கும் நாய்கள் குரைக்கட்டும் நீ பொருட்படுத்தாதே என்றார். அதற்கு பதிலளித்த ஷெரின், ரோட்டில் குரைக்கும் நாய்களை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நான் வளர்த்த சொந்த நாயே கடிக்கிறது என வனிதாவை கூறினார்.

பப்ளிக்கை சொன்னேன்

பப்ளிக்கை சொன்னேன்

அதற்கு உடனே பதிலளித்த சாக்ஷி, நான் வனிதாவை சொல்லவில்லை. பப்ளிக்கை தான் சொன்னேன், அவர்கள் என்ன பேசுகிறார்களோ பேசட்டும் என்றார். பார்வையாளர்களை பொதுமக்களை சாக்ஷி நாய்கள் என்று கூறியுள்ளார்.

பார்வையாளர்கள் கோபம்

பார்வையாளர்கள் கோபம்

இதனால் பார்வையாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர். இதற்காக மக்களிடம் சாக்ஷியும் பிக்பாஸும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறி வருகின்றனர்.

மன்னிப்பு கேட்பார்களா?

நாயாம்.. இதெல்லாம் டூ மச்.. சாக்ஷியும் பிக்பாஸும் மன்னிப்பு கேட்பாளர்களா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

அவருடைய வாழ்க்கை

சாக்ஷி மக்களை நாய்களோடு ஒப்பிட்டு பேசியிருக்கிறார். அவளோட வாழ்க்கையே பொதுமக்களால்தான் என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

கமல் கண்டிக்கனும்

மக்களை நாய்கள்ன்னு சொல்ல உனக்கு என்ன துணிச்சல் சாக்ஷி? இது முற்றிலும் தவறானது. இதற்கு அவள் மக்களிட்ம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். கமல்ஹாசனும் இதனை கண்டிக்க வேண்டும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

மன்னிப்பு கேட்ட சரவணன்

மன்னிப்பு கேட்ட சரவணன்

நடிகர் சரவணன் கல்லூரி காலத்தில் பெண்களை உரசியதாக கூறியது சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X