வெளியே போனால் இந்த மூஞ்சியை எல்லாம் நான் பார்ப்பேனா?: கவினை கேவலமாக பேசிய சாக்ஷி
சென்னை: வனிதாவிடம் கவினை பற்றி அப்படி கூறிவிட்டு சாக்ஷி தற்போது நடந்து கொள்வதை பார்த்தால் எல்லாமே வெறும் நடிப்பா என்று கேட்கத் தோன்றுகிறது.
பிக் பாஸ் 3 வீட்டிற்குள் வந்த நாளே கவின் மீது காதல் என்று கூறினார் அபிராமி. அது எப்படிம்மா வந்த கையோடு காதல் வரும் என்று கேட்டு பலரும் அவரை கலாய்த்தார்கள். ஆனால் கவின் அபிராமியை கண்டுகொள்ளவில்லை. மாறாக அவரின் கவனம் சாக்ஷி பக்கம் திரும்பியது.
கவினும், சாக்ஷியும் காதலர்கள் என்று முடிவுக்கு வந்துவிட்டனர் பார்வையாளர்கள். அந்த அளவுக்கு ஒரே லவ்ஸாக இருந்தது, இருக்கிறது.

லாஸ்லியா
கவின் சாக்ஷியை காதலித்த நிலையில் அவருக்கு லாஸ்லியா மீதும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. மிக்சர் மாமியாக இருந்த லாஸ்லியா கவின் மீது ஆர்வம் காட்டி முக்கோண காதல் கதையில் ஒருவராக ஆனார். அதில் இருந்து இந்த மூன்று பேர் பண்ணும் அலப்பறைகளை தான் அதிகமாக காட்டுகிறார்கள். கவினுக்கு ஒன்று அல்ல மாறாக இரண்டு பெண்கள் தேவைப்படுகிறது காதலிக்க.

வனிதா
பிக் பாஸ் 3 வீட்டில் இரண்டு நாளுக்கு ஒரு காதல் உருவாகிறது என்று முன்னாள் போட்டியாளரான வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். கவின் பற்றி வனிதா சாக்ஷியிடம் கேட்டதற்கு, அக்கா வெளியே போனால் இந்த மூஞ்சியை எல்லாம் நான் பார்ப்பேனா என்று தெரிவித்துள்ளார். இதையும் வனிதா பேட்டியில் தெரிவித்தார்.

நடிப்பு
பிக் பாஸ் வீட்டில் வைத்து கவின் சாக்ஷிக்கு லிப் டூ லிப் முத்தம் எல்லாம் கொடுத்துள்ளார். அந்த அம்மணி முத்தம் கொடுத்த கவினின் முகத்தை சேர்த்து நாலு அறை வைக்காமல் பேசாமல் இருந்துள்ளார். வெளியே போயி இந்த மூஞ்சியை எல்லாம் பார்க்க மாட்டேன் என்று கூறிவிட்டு அதே நபருடன் ஒட்டி உறவாடுவது ஏனோ?

பேராசை
காதல் காட்சியால் தான் தன் மீது கேமரா ஃபோகஸ் அதிகம் வருகிறது என்பது சாக்ஷிக்கு தெரிந்துள்ளது. அதனால் தான் கவினை பற்றி வனிதாவிடம் கேவலமாக தெரிவித்தபோதிலும் ஓட்டுகள், கேமராவுக்காக நடித்துக் கொண்டிருக்கிறார் போன்று. சாக்ஷியின் செயல்களை பார்க்கும் பார்வையாளர்கள் அவரை ஸ்நேக் என்று அழைக்கிறார்கள். காசு, பணம், துட்டு, மணி, மணிக்காக இந்த சாக்ஷி இந்த அளவுக்கு இறங்கி வந்துவிட்டாரே என்று விமர்சனம் எழுந்துள்ளது.

மோசம்
கவினுக்கு ஏற்கனவே காதலி உள்ளார். இது பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களுக்கு தெரியும். தெரிந்தும் கவினுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறார்கள். கவினும் வெளியே காதலி டிவி மூலம் தனது கடலை விஷயங்களை பார்ப்பாரே என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் சாக்ஷி, லாஸ்லியா பின்னாலேயே சுற்றுகிறார். கலி காலமடா பரமா.


Click it and Unblock the Notifications











