ஆம்பளையாடா நீ.. கண்ட இடத்துல கை வச்சவனுக்கு ஓங்கி குத்து விட்ட சீரியல் நடிகை.. அஞ்சலி பாஸ்கர் பளிச்!

சென்னை: விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வரும் சக்திவேல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் அஞ்சலி பாஸ்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு பேருந்தில் நடந்த பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது அவரது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

சமந்தா நடித்த ’தி ஃபேமிலி மேன் 2’ வெப்சீரிஸில் நடிகை சமந்தாவை பேருந்தில் படுமோசமாக ஒரு நபர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

Sakthivel Serial Actress Anjali Baskar opens up about how she facing harrasment at a Bus

சினிமாவில் மட்டுமின்றி தினசரி அலுவலகத்துக்கு செல்லும் பெண்கள், கல்லூரிக்கு செல்லும் பெண்கள் என பலர் இதுபோன்ற சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அதுபோன்ற ஒரு சம்பவம் தனக்கும் ஏற்பட்டதாக சக்திவேல் சீரியல் நடிகை அஞ்சலி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

7g ரெயின்போ காலனி: செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான 7g ரெயின்போ காலனி படத்திலேயே ஹீரோ ரவி கிருஷ்ணா நாயகி சோனியா அகர்வாலிடம் பேருந்தில் தப்பாக நடந்துக் கொண்டதாக அவரை அடித்து வெளியே தள்ளுவார்கள். பல படங்களில் இந்த பேருந்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு காரணம் அந்த காலம் முதல் இந்தக் காலம் வரை பலரும் அந்த வேதனைகளை அனுபவித்து வருவதுதான். அப்படி ஒரு சிக்கலில் சீரியல் நடிகை சிக்கியதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அஞ்சலி பாஸ்கர்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியலில் பேராசிரியை சக்தியாக அஞ்சலி பாஸ்கர் நடித்து வருகிறார். பணக்கார வீட்டுப் பையன் வேல் அவரை காதலிக்கும் விதமாக அந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது. ரொம்பவே கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும் ஆரம்ப காலகட்டத்தில் தோழிகளின் உடைகளை அணிந்து கொண்டு தான் ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளேன் என்றும் வண்டிக்கு போக கூட காசு இருக்காது எனக் கூறியுள்ளார்.

மேல கையை வச்சிட்டான்: தனக்கு நேர்ந்த ரொம்பவே மோசமான ஒரு விஷயம் என்றால், அது ஒருமுறை பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் ரொம்ப நேரமாக தன்னுடைய தோளில் உரசிக் கொண்டே இருந்தார். தகாத முறையில் தொட்ட நிலையில், அதை பார்த்து கடுப்பான நான் அவரை ஓங்கி ஒரு குத்து விட்டேன். பின்னர், அசிங்க அசிங்கமாக திட்டி தீர்த்து விட்டேன். அவர் உடனே இறங்கி சென்று விட்டார் என்றார்.

யாரும் கண்டுக்கல: பொதுவாகவே பேருந்தில் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டால் பேருந்தில் உள்ளவர்கள் தட்டி கேட்பதை எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால், எனக்கு நேர்ந்த போது பெண்கள் உள்ளிட்ட யாருமே குரல் கொடுக்கவில்லை. அதுதான் என்னை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்தியது என உருக்கமாக பேசியுள்ளார்.

அட்ஜஸ்ட்மெண்ட் விவகாரம்: சீரியலில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னை பொறுத்தவரையில் யாரும் என்னிடம் தப்பாக இதுவரை நடந்துக் கொள்ளவில்லை. அதே போல அத்துமீறி பேசுவதோ, அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைப்பதோ போன்றெல்லாம் இல்லை. கடுமையாக உழைத்து நல்ல நடிகையாக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் எனக் கூறியுள்ளார்.பெண்களுக்கு சமூகத்தில் இன்னமும் பல்வேறு வழிகளில் தொல்லைகள் இருந்துக் கொண்டு தான் இருக்கின்றன என்றும் சோஷியல் மீடியாவில் சிலர் ஃபேக் ஐடியில் போடும் மோசமான கமெண்ட்டுகள் ரொம்பவே ஹர்ட் பண்ணும் என்றும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X