ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா?
சினிமாவில் ஹீரோக்கள்,பிரபல ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்தைக் கேட்டாலே தலை சுற்றும். ரூ.25 கோடி ரூ.50 கோடி என பிரபலங்களும், ரூ.10 கோடி, 5 கோடி என நடுத்தர ஹீரோக்களும் சம்பளம் வாங்குகின்றனர்.
இன்றைக்கு தமிழ் சினிமா ஹீரோயின்களின் சம்பளமும் கோடிக்கணக்கில்தான். தங்களுக்கு இருக்கும் மார்க்கெட்டைப் பொறுத்து சில நடிகைகள் விளம்பர படங்களுக்கே கோடிகளில்தான் சம்பளம் பேசுகின்றனர்.
அதேசமயம் சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகிகளுக்குத்தான் கூடுதல் சம்பளம். ராதிகா, ராதா, ரோஜா,குஷ்பு, தேவயானி சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் என பல எபிசோடுக்கு லட்சங்களில்தான் வாங்குகின்றனராம்.
ஒவ்வொரு சீரியலும் வருடக்கணக்கில் ஒளிபரப்பாகிறது. ஒரு சீரியலில் கமிட் ஆனாலே கோடிக்கணக்கில் சம்பளம் கிடைத்துவிடுகிறது கதாநாயகிகளுக்கு.
ஹீரோயின்கள் மட்டுமல்ல பாட்டி, மாமியார், அண்ணி, நாத்தனார் என நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கும் நல்ல சம்பளம் கிடைப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

ராதா
நடன ரியாலிட்டி நிகழ்ச்சியின் நடுவராக வந்து கலங்கடிக்கும் ராதாவின் ஒரு எபிசோடு சம்பளம் ரூ.2 லட்சம்.

சிம்ரன்
சிம்ரன் தனது சொந்த தயாரிப்பில் நடன ரியாலிட்டி ஷோ நடத்துகிறார். அவரது ஒரு எபிசோடு சம்பளம் ரூ. 1 லட்சமாம்.

ராதிகா
இன்றைக்கு சீரியல் கதாநாயகிகளில் ராதிகாதான் டாப் என்கின்றனர். அவரது சம்பளம் ஒரு எபிசோடுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்கின்றனர்.

குஷ்பு
ராதிகாவைத் தொடர்ந்து சீரியல் தயாரித்து நடிக்கும் குஷ்பு ஒரு எபிசோடுக்கு வாங்குவது ரூ.60000.

ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால்
குஷ்புவைத் தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் வாங்குவது ரூ.50000. அதேபோல சோனியா அகர்வால் ஒரு எபிசோடுக்கு ரூ.50000.

லட்சுமி ராமகிருஷ்ணன்
சீரியல் மட்டுமல்லாது டாக் ஷோ நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன், இசை நிகழ்ச்சிக்கு நடுவராக வரும் அனுராதா ஸ்ரீ ராம் ஆகியோர் ரூ.50000 வாங்குகின்றனராம்.

மனோ சித்ரா
அதேபோல இசைநிகழ்ச்சிகளின் நடுவர்களாக வரும் மனோ, சித்ரா, கங்கை அமரன் ஆகியோர் ஒரு எபிசோடு சம்பளம் ரூ.1 லட்சம் என்கின்றனர்.

மதுமிதா,மகேஸ்வரி
சினிமாவில் இருந்து மன்னன் மகள் சீரியலுக்கு வந்த மதுமிதாவிற்கு ஒரு எபிசோடுக்கு ரூ.40000 சம்பளமாம். அதேபோல சங்கவியின் சம்பளம் ஒரு எபிசோடுக்கு ரூ.40000. கருத்தம்மா மகேஸ்வரியும், அம்முவாகிய நான் பாரதியும் ஒரு எபிசோடுக்கு ரூ.25000 வாங்குகின்றனராம்.

ஸ்ருதி, சந்தோஷி
இதேபோல இன்றைக்கு ஒரு சீரியல் மூலம் ஓஹோ என்ற நிலைக்குப் போன ஸ்ருதி, ஷமீதா, சந்தோஷி, நிமா ஆகியோர் ஒன்றுக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒரு எபிசோடுக்கு ரூ.25000 வாங்குகின்றனராம்.

வாணிபோஜன்
புதுமுக நடிகைகளான வாணிபோஜன்,வித்யா ஆகியோர் பத்தாயிரம் ரூபாயும், மகாலட்சுமி, மோனிகா,மேக்னா, நிஷா ஷப்னம் ஆகியோர் ரூ.6000 வாங்குகின்றனராம்.

மாமியார் நடிகைகள்
சீரியல்களில் கதாநாயகிகளை விட அதிக அளவில் இல்லத்தரசிகளால் விரும்பப்படுவது வில்லி நடிகைகள்தான்.பெரும்பாலும், மாமியார், நாத்தனார், ஆகியோர்தான் வில்லிகளாக வலம் வருகின்றனர். நளினி, சுதாசந்திரன் ஒரு எபிசோடுக்கு ரூ. 15000 வாங்குகின்றனராம்.

வடிவுக்கரசி,சாந்தி வில்லியம்ஸ்
வடிவுக்கரசி, சாந்தி வில்லியம்ஸ்,ஸ்ரீலேகா ராஜேந்திரன் ஆகியோர் ஒரு எபிசோடுக்கு ரூ.10000 வாங்குகின்றனராம்.

சீரியல் நடிகர்கள் சம்பளம்
சீரியல் ஹீரோயின்கள், வில்லிகளை சொல்லிவிட்டு ஹீரோக்களை சொல்லாமல் போகலாமா? வேணு அரவிந்த், பப்லு, ஸ்ரீ ஆகியோர் வாங்கும் சம்பளம் ஒரு எபிசோடுக்கு ரூ.20000.

அப்பா நடிகர்கள்
விஜயகுமார், மௌலி,பூவிலங்கு மோகன் ஆகியோர் ஒரு எபிசோடுக்கு ரூ.30000 வாங்குகின்றனராம்.

காசு கொடுத்து அழுபவர்கள்
சீரியலில் அவர்கள் லட்சக்கணக்கில் காசு வாங்கிக்கொண்டு அழுகிறார்கள். நாம் காசு கொடுத்து அழுகிறோம் அதுதான் வித்தியாசம்.


Click it and Unblock the Notifications











