»   »  டூ.. டூ மச்சா பேசுறாங்க: பகல் நிலவு சீரியலில் இருந்து விலகிய ஜோடி

டூ.. டூ மச்சா பேசுறாங்க: பகல் நிலவு சீரியலில் இருந்து விலகிய ஜோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
பகல் நிலவு சீரியலில் இருந்து விலகிய ஜோடி

சென்னை: பகல் நிலவு தொலைக்காட்சி தொடரில் இருந்து சமீராவும், அன்வரும் விலகியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பகல் நிலவு தொலைக்காட்சி தொடரில் நிஜ வாழ்க்கை ஜோடியான சமீரா, அன்வர் ஆகியோர் ரீல் ஜோடியாக நடித்து வந்தனர். மற்றொரு ஜோடியாக சவுந்தர்யா, கார்த்திக் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் சமீரா மற்றும் அன்வர் தொலைக்காட்சி தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

டிசம்பர்

டிசம்பர்

நானும், அன்வரும் பகல் நிலவு தொடரில் இருந்து டிசம்பர் மாதமே வெளியேறிவிட்டோம். இது குறித்து டிசம்பர் மாதமே இயக்குனரிடம் கூறினோம் என்று சமீரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அன்வர்

அன்வர்

ஆளாளுக்கு குரூப் சேர்ந்து கொள்கின்றனர். எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு எழுத்தாளர், சேனல், தயாரிப்பாளரை நாங்கள் கேட்டுக் கொண்டதாக எங்களுக்கு பின்னால் பேசினார்கள் என்கிறார் சமீரா.

ரசிகர்கள்

ரசிகர்கள்

எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு நாங்கள் யாரையும் கேட்கவில்லை. நாங்கள் நடித்த காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் மற்றொரு ஜோடிக்கு அதே அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்று சமீரா கூறியுள்ளார்.

பிடிக்கவில்லை

பிடிக்கவில்லை

உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கச் செய்தீர்களா என்று மற்றொரு ஜோடி எங்களிடம் கேட்டது. நாங்கள் எதுவும் செய்யாமலேயே பழியை சுமக்க வேண்டியதாகிவிட்டது. அந்த ஜோடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு நாங்கள் எழுத்தாளரிடம் கேட்டும் பலனில்லை. ஆனால் கிசுகிசு நிற்கவில்லை என்று சமீரா தெரிவித்துள்ளார்.

காரணம்

காரணம்

நானும், சமீராவும் இந்த துறையில் 10 ஆண்டுகளாக உள்ளோம். நாங்கள் யார் வளர்ச்சியையும் தடுக்க மாட்டோம். நாங்கள் தொடரில் இருந்து விலக மற்றொரு காரணமும் உள்ளது என்கிறார் அன்வர்.

தாமதம்

தாமதம்

ஷூட்டிங்கிற்கு காலையில் வரச் சொல்லிவிட்டு மாலையில் தான் துவங்குவார்கள். இரவு 9 மணிக்கு மேல் நடிக்க மாட்டோம் என்று கூறியிருந்தும் கேட்கவில்லை. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் எதுவும் மாறவில்லை என்று அன்வர் கூறியுள்ளார்.

English summary
Real life couple Anwar and Sameera who acted as reel couple in the television serial Pagal Nilavu got great response from the audience. But they have opted out of the series citing two reasons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X