சின்னத்திரை தயாரிப்பாளராகும் சமுத்திரகனி! சீரியல் தயாரிக்கிறார்

By Mayura Akilan

சினிமாவில் படம் இயக்கி அண்ணி சீரியல் மூலம் பிரபலமானவர் சமுத்திரகனி. இப்போது சின்னத்திரையில் சீரியல் தயாரித்து பலருக்கு வாய்ப்பு தர உள்ளாராம்.

தற்போது சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் பிரபலமடைந்துள்ளார் சமுத்திரகனி.

இப்போது ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கும் "நிமிர்ந்து நில்' படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தை முடித்துவிட்டு தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பில் இறங்க உள்ளாராம்.

வேந்தர் மூவிஸ்

வேந்தர் மூவிஸ்

விரைவில் ஒளிபரப்பைத் தொடங்கவிருக்கும் புதிய தொலைக்காட்சி சேனலான வேந்தர் தொலைக்காட்சி பல முன்னணி இயக்குநர்களை வைத்து நெடுந்தொடர்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது.

சமுத்திரகனி சம்மதம்

சமுத்திரகனி சம்மதம்

சமுத்திரக்கனிக்கு சின்னத்திரையில் நல்ல அனுபவம் இருக்கிறது என்பதால் ஒரு தொடர் தயாரித்துத் தர அவரை அணுகினார்களாம். மறுத்துவிடுவார் என்று நினைத்துத்தான் அவரைத் தொடர்புகொண்டார்களாம். ஆனால் அவரோ தொடர் தயாரிக்க ஒரேயொரு நிபந்தனை விதித்தாராம்.

தொடர் தயாரிப்பாளர்

தொடர் தயாரிப்பாளர்

"தொடரை நான் தயாரிக்க மட்டும் செய்வேன், வேறொரு இயக்குநரை வைத்து இயக்கிக்கொள்கிறேன்' என்பது தான் அந்த நிபந்தனை. அதற்கு நிறுவனமும் ஒப்புக்கொண்டிருக்கிறது. எனவே இப்போது "நிமிர்ந்து நில்" படவேலைகளுக்கு நடுவில் தொடர் தயாரிப்பு வேலைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.

வ.கவுதமன் இயக்குகிறார்

வ.கவுதமன் இயக்குகிறார்

இத்தொடரை, "கனவே கலையாதே", "மகிழ்ச்சி" ஆகிய படங்களை இயக்கிய வ.கெளதமன் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர் ஏற்கெனவே "ஆட்டோ சங்கர்", "சந்தனக் காடு' ஆகிய வாழ்க்கை வரலாற்றைத் தொடர்களை எடுத்தவர்.

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு

இப்போதும் அது மாதிரியே ஒரு வாழ்க்கைக் கதையையே அவர் தொடராக எடுக்கவிருக்கிறாராம். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள். சமுத்திரகனி தயாரிப்பில் விரைவில் புதிய தொடர்களை காணலாம் என்கின்றனர் வேந்தர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X