யாருடா எச்சை.. சீறிய பிக் பாஸ் பிரபலம்.. நெட்டிசன் போட்ட மோசமான கமெண்ட்.. வெளுத்து வாங்கிட்டாரு!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டால் சோஷியல் மீடியாவில் அவர்களை பாராட்டுவதும் திட்டுவதும் ரசிகர்கள் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். தங்களுக்கு பிடித்து விட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதும், பிடிக்காத நபர்களை வன்மத்தை கக்கி நோகடிப்பதும் என சோஷியல் மீடியா புல்லிங் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

இதனை பல பிரபலங்கள் கடந்து சென்றாலும், சிலர் பார்த்து விட்டு மனதளவில் காயம் ஏற்பட உடனடியாக ரியாக்ட்டும் செய்து விடுகின்றனர். பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சனம் ஷெட்டி கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வந்த நிலையில், நெட்டிசன் ஒருவர் அவரை கேவலமாக பேசி கமெண்ட் போட்ட நிலையில் கொந்தளித்துள்ளார்.

Sanam Shetty got angry over on a Bigg Boss fan very worst comment

நடிகையும் பிக் பாஸ் பிரபலமும்: 2012ல் வெளியான அம்புலி 3டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. சினிமா கம்பெனி, மாயை, தொட்டால் விடாது, விலாசம், கதம் கதம், வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சதுரம் 2, ஊமை செந்நாய், மஹா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சனம் ஷெட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது.

மக்கள் நாயகி: பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டாலும் மக்கள் நாயகி என்கிற பட்டத்தை பெற்று அசத்தினார். ஆரம்பத்தில் இவருக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் இடையே ஏற்பட்ட பஞ்சாயத்து அந்த சீசனின் பெரிய ஹைலைட்டாக மாறியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தாலும், பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த சீசன் முழுவதும் விமர்(சனம்) ஆக மாறி பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்ததில் ஏகப்பட்ட ஆதரவாளர்களையும் ஹேட்டர்களையும் சம்பாதித்தார்.

Sanam Shetty got angry over on a Bigg Boss fan very worst comment

தர்ஷன் உன்னை விட்டு ஓடிட்டாரு: சனம் ஷெட்டிக்கு மென்டல் ஹெல்த் சரியில்லை என்றும் "இதற்காகத்தான் தர்ஷன் ப்ரோ உன்னை விட்டு ஓடிட்டாரு, பப்ளிசிட்டிக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவ, பாவம் உனக்கு எந்தவேலையும் இல்லை, இதுக்கு பேரு எச்ச" என படு மோசமான கமெண்ட் ஒன்றை போட்டிருக்கிறார்.

யாருடா எச்ச: அந்த கமெண்டை பார்த்ததும் கடுப்பான சனம் ஷெட்டி யாருடா எச்ச? என்ன பேசுனாலும் அமைதியா போவேன்னு நினைச்சியா, என்னை எப்படி மனநலம் பாதிக்கப்பட்டவருன்னு சொல்லலாம். ஒருத்தரை இப்படித்தான் மனநலம் பாதிக்கப்பட்டவருன்னு சொல்லி பிராண்ட் பண்ணுவியா? அதெல்லாம் உங்களுக்கு அவ்ளோ சாதாரணமா போச்சா? என்னோட பேஜுக்கு வந்து என்னை அப்யூஸ் பண்ண நீ யாருடா முதல்ல என சரமாரியாக கேள்விகளை அடுக்கி வெளுத்து வாங்கி உள்ளார் சனம் ஷெட்டி.

ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்: இவர்களை எல்லாம் பெரிதுப்படுத்த வேண்டாம் சிஸ்டர். உங்கள் பணியை சிறப்பாக செய்து வரீங்க, இப்படித்தான் சிலர் அட்டென்ஷன் சீக்கிங் பண்ண கண்ட கமெண்ட்ஸ் போடுவாங்க அதையெல்லாம் கண்டுக்காமல் கடந்து போய் விடுங்க என சனம் ஷெட்டிக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X