twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராத்திரி நேரத்தில்.. அதைப் பிடித்துக் கொண்டு.. அச்சோ.. ஷாக்கடிக்கப் போகுது சனம்..!

    |

    சென்னை: ராத்திரி நேரத்தில் அரைகுறை உடையோடு, லைட்டைப் பிடிப்பது போல போட்டோ வெளியிட்ட சனம் ஷெட்டியைப் பார்த்து ஐயோ ஷாக்கடித்திட போகிறது என பதறிப்போயுள்ளார்கள் ரசிகர்கள்.

    Recommended Video

    Sanam Shetty Candle Light Dinner | Valentines Day, Tharshan

    பார்த்ததும் பதறி போகிற அளவில் படுகவர்ச்சியாக ரொம்ப நாளைக்கு பிறகு இணையதளங்களில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் சனம் தாறுமாறாக வைரலாக பரவி வருகிறார் .

    சனம் ஷெட்டி எனும் பெயரைச் சொன்னதுமே படபட பேச்சால் தனக்கே உரிய திமிரோடு அடுத்தவர்களின் மீது பாசத்தோடும் இருந்த ஒரு கேரக்டரை தான் ஞாபகத்திற்கு வருகிறது.

    மாடலிங்கில் அசத்தல்

    மாடலிங்கில் அசத்தல்

    முன்பு இவர் ஒரு மாடலாக இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் பரிச்சயமான முகம் ஆக மாறிவிட்டார் .இந்த வீட்டில் ஆரம்பத்தில் இவர் இருக்கும் போது இவரை ரசிக்காதவர்கள் கூட நாள் போகப்போக இவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர். அந்த அளவிற்கு தன்னுடைய உண்மையான கேரக்டரால் ரசிகர்களை கவர்ந்து விட்டார். சனம் 2016இல் மிஸ் தென்னிந்தியா எனும் பட்டத்தை பெற்றிருந்தாலும் சினிமா படங்களிலும் அடிக்கடி பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார்.

    யாருடா இந்த பொண்ணு

    யாருடா இந்த பொண்ணு

    ஒரு நடிகையாகவும் மாடலாகவும் ஜொலித்துக் கொண்டிருந்த இவரை இந்த பிக்பாஸ் வீட்டில் அறிமுகப்படுத்தியதும் பலருக்கு யாருடா இந்த பொண்ணு இப்படி இருக்கிறதே என யோசிக்க வைத்து விட்டார் .ஆனால் சிலரை பார்த்ததும் பிடிக்கும் சிலரை பழகிப் பார்த்தால் தான் பிடிக்கும் என்பது போல இவரை பழகி பார்க்க தான் பலருக்கும் பிடித்துவிட்டது.

    அம்புலி படம்

    அம்புலி படம்

    இவர் இந்த வீட்டில் பாதியிலேயே வெளியேறி போகிறார் என அறிவிப்பு வெளியானதும் கூட பதறிப்போன ரசிகர்கள் இவருக்காக சமூக வலைத்தளங்களில் ஹாஸ்டேக் உருவாக்கி இவர் மீது வைத்திருக்கும் பாசத்தை தெரிவித்து வந்தனர். முதல்முதலில் அம்புலி படத்தில் பூங்காவனம் எனும் கேரக்டரில் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றார் .

    புகழ் தந்த பிக் பாஸ்

    புகழ் தந்த பிக் பாஸ்

    அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பேரும் புகழும் வாங்கி தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் .இந்த நிகழ்ச்சி மூலம் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார். கோவக்கார பெண்ணாக இருந்தாலும் பாசக்கார பொண்ணு என அடிக்கடி நிரூபித்து மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பெற்று தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையும் பெருகிவிட்டார் .

    கையில் பல்பு

    கையில் பல்பு

    இதுவும் போதாது என்று இந்த நிகழ்ச்சியில் இவரை காணாமல் தவித்து வந்த அவருடைய ரசிகர்களுக்காக அடிக்கடி இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போட்டு வருகிறார். அதுவும் தற்போது இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது. என்னதான் எல்லோரும் காடு மலை மேடு என சுற்றித்திரிந்து போட்டோ ஷூட் நடத்தினாலும் எனக்கு இதெல்லாம் தேவைப்படாது நானே பேரழகி என மொட்டை மாடியில் பல்பை பிடித்துக்கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர முடியும் என கெத்து காட்டி இருக்கிறார் .

    குண்டு பல்பு

    குண்டு பல்பு

    இவரை இந்த மாதிரி ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் குஷி ஆனாலும் இவர் கையில் பிடித்திருப்பது குண்டு பல்பு என்பதால் பார்த்து பார்த்து ஷாக் அடித்துவிட போகிறது என கதறி வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் ஷாக்குகே ஷாக் அடிக்குமா என பஞ்ச் பேசியும் வருகிறார்கள். ஆனாலும் ராத்திரி நேரத்தில் இந்த மாதிரி போஸ் கொடுத்து பல பேர் தூக்கத்தை கெடுக்க வேண்டாம் எனவும் சிலர் கெஞ்சியும் வருகிறார்கள்.

    ராத்திரி நேரத்தில்

    ராத்திரி நேரத்தில்

    என்னதான் இருந்தாலும் எந்த மேக்கப்பும் போடாமல் இரவு நேரத்தில் பல்பு வெளிச்சத்தில் தேவதை போல இவர் எடுத்து இருக்கும் போட்டோஸ்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது .அதுவும் இவரது போட்டோவை பார்த்ததும் பலர் கவிதைகளையும் கொட்டி வருகிறார்கள் .ஒரு சிலரோ நல்லா சாப்பிடுங்க ஒல்லியா ஆகிட்டீங்க என இவர் மீது அக்கறையாக பாசத்தை பொழிந்து வருகிறார்கள்.

    English summary
    Sanam Shetty latest photo goes viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X