வாயை தொறந்தாலே கெட்ட வார்த்தையா வருதே ஜோவிகா.. வெளுத்து வாங்கிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நிலையில், சமீபத்தில் பிரதீப் ஆண்டனிக்கு எதிராக குரல் கொடுத்து அவரை வெளியேற்ற வேண்டுமென போராடினார்.

பிரதீப் ஆண்டனி கெட்ட வார்த்தை பேசுகிறார் என்றும் தப்பான பார்வை பார்க்கிறார் என்றும் ஜோவிகா உள்ளிட்ட பல பெண் போட்டியாளர்கள் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

Sanam Shetty slams Vanitha Vijayakumar daughter Jovika using cuzz words in Bigg Boss Tamil 7

சனம் ஷெட்டி எவிக்‌ஷன்: பிக் பாஸ் வீட்டில் தற்போது பிரதீப் ஆண்டனி எவிக்ட் ஆனது எப்படி நியாயமில்லை என ரசிகர்கள் பேசுகின்றனரோ அதைவிட அதிகமாக மக்கள் நாயகியாக மாறிய சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் பலரும் ஆதரவு தெரிவித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே 20 படங்களுக்கு மேல் நடித்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற சனம் பிக் பாஸுக்கு பிறகும் பெரிதாக ஷைன் ஆகவில்லை. இந்நிலையில், பிக் பாஸ் விமர்சகராக இந்த சீசனில் மாறி உள்ளார்.

கெட்டவார்த்தை பேசிய ஜோவிகா: பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் பல போட்டியாளர்கள் தொடர்ந்து கெட்ட வார்த்தை பேசி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டாலும் விக்ரம் படத்தில் கெட்ட வார்த்தை பேசி நடித்த கமல் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் 24 மணி நேர ஓடிடியில் அதெல்லாம் சகஜமப்பா என கடந்து போகிறார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது. வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா கெட்ட வார்த்தை பேசியதாக சனம் ஷெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.

ரொம்ப மோசம்: பிரதீப் ஆண்டனி கெட்ட வார்த்தை பேசுகிறார், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என ரெட் கார்டு கொடுத்த ஜோவிகா இப்போ தினேஷனை பார்த்து “அவரு ஆம்பளையான்னு அவருக்கே சந்தேகமா இருக்கு என்றும் அர்ச்சனாவை பார்த்து ஆபாச வார்த்தைகளையும் அள்ளி வீசியுள்ளார் என ட்வீட் போட்டு வெளுத்து வாங்கி உள்ளார்.

வனிதா விளக்கம்: தனது மகள் அப்படி பேசவில்லை என வனிதா விஜயகுமார் சனம் ஷெட்டிக்கு ட்வீட் போட்டு விளக்கம் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் ஜோவிகாவுக்கு கிடைத்து வந்த ஆதரவு தற்போது டோட்டலாக மாறி அவரை சோஷியல் மீடியாவில் படு மோசமாக விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் ஹீரோயின்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்கு வராமல் விஜய் டிவி சீரியல் நடிகர்களே பங்கேற்று வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X