எனக்காக செஞ்சாரு ஆரி.. மனசைத் திறந்த சனம் ஷெட்டி.. வைரல் வீடியோ

சென்னை: எனக்காக பலபேர் பகையை சம்பாதித்தார் ஆரி என்று பிறந்தநாள் வாழ்த்து வித்யாசமாக கூறிய சனம் ஷெட்டியின் வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

Recommended Video

சென்னை: புரோ நீங்க 100 வருஷம் ஹேப்பியா வாழணும்… ஆரிக்கு உணர்ச்சி பொங்க வாழ்த்து தெரிவித்த சனம்!

பிக்பாஸ் மூலமாக பெரும் பிரபலம் அடைந்த ஆரியின் பிறந்த நாள் அவருடைய ரசிகர்களால் பெரும் பயங்கரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரது பிறந்தநாளுக்கு திரைப்படத் துறையினரும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 ஆரிக்குப் பிறந்த நாள்

ஆரிக்குப் பிறந்த நாள்

இந்த நிலையில் அவர் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி எல்லா பிறந்தநாளை விடவும் இந்த பிறந்தநாள் ரொம்பவும் வித்தியாசமாக இருந்துகொண்டிருக்கிறது. உலகத்திலிருந்து பல பேரு எனக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது என்று தன்னுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.

 உருகி நெகிழ்ந்த சனம்

உருகி நெகிழ்ந்த சனம்

அதுபோல அவரது பிறந்த நாளுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட சனம் உருகி உருகி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் இந்த வீட்டிற்குள் இருக்கும் போது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் வெளியே வந்த பிறகு அண்ணன் தங்கச்சி களாக மாறி விட்டார்கள் என்பது தற்போது தெரிகின்றது.

 நீங்கதான் ஆண்மகன்

நீங்கதான் ஆண்மகன்

சிறந்த ஆண்மகன் சகோதரன் நீங்கள்தான் என்று சனம் கூறியிருக்கிறார். அதுவுமில்லாமல் எனக்காக இந்த வீட்டிற்கு இருக்கும்போது சப்போர்ட் பண்ணி பலபேர் பகையை சம்பாதித்தாலும் எனக்கு இருந்த ஒரே ஆறுதல் நீங்கள்தான் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் ஒரு பெர்பெக்ட் ஜென்டில்மேன் என்னோட ஃபேவரைட் கன்டஸ்டன்ட் உங்கள நேரடியா மீட் பண்ணி விஷ் பண்ணனும் என்று தான் ஆசை.

 சீக்கிரமா வர்றேன்

சீக்கிரமா வர்றேன்

ஆனால் நான் இப்போ பெங்களூர்ல இருக்கிறேன் .அதனால் அது முடியல கண்டிப்பாக சென்னை வந்து உங்களையும் ரியா பாப்பாவையும் உங்களுடைய வைஃப்பையும் பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார். ஆரி பிரதர் இந்த பிக்பாஸ் நாலாவது சீசனில் உங்களுக்கு சக போட்டியாளராக இருந்தது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

 எனக்காக குரல் கொடுத்தவர்

எனக்காக குரல் கொடுத்தவர்

எனக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நிறைய ப்ராபளம் இருந்துச்சு அது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான் ஆனா எனக்காக குரல் கொடுக்க யாருமே இல்லையே என வருத்தப்படுவதற்கு முன்னமே எனக்காக நீங்க இருந்து இருக்கீங்க. ஒவ்வொரு தருணத்திலும் சப்போர்ட் பண்ணி நிறைய எதிரிகளை சம்பாதித்து இருக்கீங்க .அதோட ஃபீலிங் அதோட வலி எனக்கு மட்டும்தான் தெரியும் .

 சப்போர்ட்

சப்போர்ட்

உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. எனக்கு நீங்க கொடுத்த சப்போட் அதையும் மீறி எனக்கு நீங்க கொடுத்த ரெஸ்பெக்ட் பொதுவாக பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை நிறைய பேர் உங்கள பாத்து கத்துக்கணும் என்று அவரை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். நிறைய பேரோட ஆசீர்வாதத்துடன் தான் நீங்க இதில் வெற்றி பெற்றிருக்கின்றார்.

 மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க

மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க

இன்னும் நீங்க நிறைய பேருக்கு இந்த மாதிரி ஹெல்ப் பண்ணனும். உங்ககிட்ட இருந்து நாங்க நிறைய விஷயம் கத்துக்கணும் .அதுக்கு நூறு வருஷம் நீங்க நல்லபடியா வாழனும் என்று இந்த சகோதரியின் அன்பான மனதார வாழ்த்துக்கள் என்று பாசமழை பொழிந்து இருக்கிறார் .இவரின் இந்த வீடியோவை பார்த்து ஆரியின் ரசிகர்கள் சனதைக் புகழ்ந்து வருகிறார்கள் .

 அப்படி சண்டை போட்டீங்க

அப்படி சண்டை போட்டீங்க

ஆனால் நெட்டிசன்கள் இதற்கு இந்த வீட்டிற்குள் இருக்கும் போது நீங்கள் இருவரும் போட்ட சண்டை யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா அல்லது நீங்கள் ஆரியைப் பற்றி தப்பான பேசிக் கொண்டிருந்ததை நாங்கள் பார்க்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இப்போது இந்த பாச மழை பொழிகிறதா என்று கேட்டு வருகிறார்கள்.

 ஆரி சொன்ன நன்றி

ஆரி சொன்ன நன்றி

இந்த மாதிரி சனம் போஸ்ட் போட்டதும் அதற்கு ஆரி அர்ஜுனும் அவருக்கு நன்றி சொல்லி ரிப்பீட்டு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதுவும் இல்லாமல் உங்கள் வீட்டு பிள்ளையாக அண்ணனாக தம்பியாக ஏற்றுக்கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய உலகெங்கும் உள்ள அன்பு சொந்தங்களுக்கு என் முதல் வணக்கம் என்று வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி கூறி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X