Nila Serial: நலுங்குன்னா சந்தனம் வைக்கறதுதான்.. அதென்ன சந்தன நலுங்கு?

சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் மணப்பெண்ணாகப் போகும் நிலாவுக்கு சந்தன நலுங்காம். அதென்ன சந்தன நலுங்கு? நலுங்குன்னாலே சந்தனம் வச்சு ஆசீர்வாதம் செய்வதுதானே...விதம் விதமா யோசிக்கறாய்ங்க.

நிலாவுக்கு சந்தன நலுங்கு வைக்கும்போது, சந்தனத்தில் கெமிக்கல் கலந்துருவாங்களாம். அந்த சந்தனத்தை நிலாவுக்கு கன்னத்தில் பூசி நலுங்கு வைக்கும்போது, அவள் கன்னம் பொசுங்கி முகம் விகாரமாகி விடுமாம்.

இப்படி ஒரு கணக்கு போட்டு நிலா சீரியலில் வில்லி குரூப் அலையறாங்க. மெஹந்திக்குன்னு ஒரு விழா, மெஹந்தியில் கெமிக்கல்.. இப்போ சந்தன நலுங்காம்..சந்தனத்தில் கெமிக்கலாம்.

நலுங்குன்னா என்ன?

நலுங்குன்னா என்ன?

நலுங்குன்னா என்ன, முதலில் மணக்கும் சந்தனத்தை சந்தன கிண்ணத்தில் கரைச்சு வச்சுக்குவாங்க. பூ, குங்குமம், சர்க்கரை எல்லாம் தாம்பூலத்தட்டில் வச்சு, பெண்ணையோ, மாப்பிளையையோ உட்கார வச்சு, கன்னத்தில் சந்தனம் பூசி, சர்க்கரையை வாயில் போட்டு, குங்குமம் வச்சு ஆசிர்வதிப்பாங்க. பெண்கள் என்றால் தலையில் பூ வைச்சு விடுவாங்க.

நிலாவுக்கு நலுங்கு

நிலாவுக்கு நலுங்கு

நிலாவுக்கும் கார்த்திக்குக்கும் கல்யாணம் நடக்கப் போகுது. அப்போது நலுங்கு வைத்து பெண்ணை அழைச்சுட்டு போகும்போது, நலுங்கு வைக்க இருக்கும் சந்தனத்தை ஸ்வேதா மாத்தி வச்சுடறா அதில் கெமிக்கல் கலந்த சந்தனம் இருக்குதாம். என்ன கெமிக்கல், எப்படி இவங்களுக்கு எல்லாம் ஈஸியா கிடைக்குது?

நிலா நீலாம்பரி

நிலா நீலாம்பரி

நிலாவுக்கு எதிரியா நீலாம்பரி இருந்தாங்க... நிலாவின் கல்யாணத்தை கெடுத்தே தீரணும்னு அவங்க செயல்பட்டாங்க. இதுவரைக்கும் கல்யாண ஏற்பாடு மட்டுமே கதையில் இருந்தது. அதோடு, நிலாம்பரி என்னை வாழ விட மாட்டேன்னு சபதம் போட்டு இருக்கா. நான் தாம்பத்ய வாழ்க்கை அனுபவிக்க கூடாதுன்னு நினைக்கிறா.

தாம்பத்யம் கல்யாணம்

தாம்பத்யம் கல்யாணம்

நீலாம்பரி நினைக்கறது நடக்காது. எனக்கும் கார்த்திக்கும் கல்யாணம் நடக்கும். நாங்க தாம்பத்ய வாழ்க்கை அனுபவிப்போம் என்று அவ்வப்போது சொல்லிக்கொண்டு இருந்த நிலா, இப்போதுதான் கடந்த சில எபிசோடுகளாக அதை சொல்லவில்லை. அதற்குள் நிலா எனக்கு இனி எதிரி இல்லை. எனக்கு புது எதிரி நிலாவின் மாமனார்தான் என்று களம் இறங்கி இருக்காங்க நீலாம்பரி.இப்படி நிலா சீரியல் கதை ஆரம்பிச்ச வேகத்தில் திசை மாறி போயிருச்சு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X