Bigg Boss: அய்யோ அச்சு.. கதறி அழுது, மயங்கி விழுந்து சாண்ட்ரா ஓவர் ஆக்டிங்.. கடுப்பான ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 50 நாட்களை எட்டி உள்ளது. கடந்த வாரம் வீட்டுக்குள் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கை பார்ப்பதற்கு மிகவும் கடுப்பாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், வார கடைசியில் வந்த விஜய்சேதுபதி பார்வையாளர்களை கொடுமைப்படுத்தியதற்காக அனைவரையும் வச்சி செய்துவிட்டார். குறிப்பாக வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்த பிரஜன், சாண்ராவை பதிலே சொல்ல முடியாத படி அடுத்தடுத்த கேள்விகளை கேட்டு திணறடித்தார்.

இதையடுத்து, நேற்று புயலுக்குப் பின் அமைதி என்பதுபோல சாந்த சொரூபியாக வந்த விஜய்சேதுபதி, ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் பொறுமையாக பேசினார். பின் நாமினேஷனில் சிக்கிய அமீத், அரோரா, திவ்யா, கனி, ரம்யா, சபரி, சாண்ட்ரா, சுபிக்ஷா, விக்ரம், பாரு என அனைவரும் Save என அறிவித்தார். கடைசியில் கெமி மற்றும் பிரஜன் மட்டுமே இருந்தனர். இருவரில் யார் எலிமினேட் ஆவார்கள் என்பதை பிக் பாஸ் முடிவு எடுப்பார் என்றார்.

Bigg Boss Sandra Prajean
Photo Credit:

சாண்ட்ராவின் ஓவர் ஆக்டிங்: பின், பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த இரண்டு காரில், ஒரு காரில் பிரஜனும், மற்றொரு காரில் கெமியும் ஏறினார்கள். அதில், எந்த கார் மீண்டும் வீட்டிற்குள் வருகிறதோ, அந்த போட்டியாளர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் விளையாட்டை தொடங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிரஜன் காரில் ஏறுவதற்குள் சாண்ட்ரா கதறி அழுது அட்டகாசமே செய்தார். ஐயோ அச்சு போகாதே... நானும் வருகிறேன் என கதறி அழுது கூப்பாடு போட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படித்தான் போட்டியாளர்கள் எலிமினேடாகி வெளியே போவார்கள் என்று நன்றாக தெரிந்து தானே சாண்ட்ரா உள்ளே வந்தார். அதுமட்டுமில்லாமல், அங்கிருந்த அனைத்து போட்டியாளர்களும் இது விளையாட்டு தான், புரிஞ்சிக்கோங்க என சொல்லியும் சாண்ட்ரா, கதறி அழுததும் கார் பின்னாடியே, அய்யோ அச்சு என ஓடியதும் பார்ப்பதற்கே கடுப்பாக இருந்தது.

பாக்கவே கடுப்ப இருக்கு: இதுமட்டுமா, இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு என்பது போல, பிக் பாஸ் வீட்டில் இருந்து காரில் வெளியே சென்ற பிரஜம் மீண்டும் அந்த காரிலேயே திரும்பி வந்தார். பிரஜனைப் பார்த்த சாண்ட்ரா ஓடி சென்று கட்டி அணைத்து கதறி அழுது, அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார். இதையெல்லாம் பார்த்த போட்டியாளர்கள் இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று, பிரஜன், சாண்ராவை கேலி செய்து வருகின்றனர். சனிக்கிழமை விஜய்சேதுபதி அவர்கள், FJவின் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் பால் ஊத்துவேன் என்று சொன்னதை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்ட போது, சார்... அவர் அப்படி சொன்னது எனக்கு தெரியவே தெரியாது என்று சாண்ரா சொன்னார். ஆனால், உண்மையில் பிரஜன், அப்படி சொன்ன போது, சாண்ட்ரா அதை கேட்டு சிரித்து இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், ஏன் அச்சு இப்படி பண்ற என்று, சனிக்கிழமையும் அழுது நாடகத்தை போட்டார். நேற்று, மயக்க ட்ராமா இதுபோன்ற ஓவர் ஆக்டிங்கை சீரியலில் காட்டி நடித்து இருந்தால், ரெண்டு பேருக்கும் நல்ல வாய்ப்பாவது கிடைத்திருக்கும். நிகழ்ச்சியில் இப்படி எல்லாம் ஓவர் ஆக்டிங் செய்து தான் இருவரும் சிறந்த தம்பதிகளாக வாழ்கிறோம் என்பதை நிரூபிக்க போகிறார்களா என இணையவாசிகள் கமெண்ட்டுகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: bigg boss பிரஜன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X