பிக் பாஸ் வீட்டில் பட்டப்பகலில் திருட்டு: 60 கேமராக்கள் இருந்து என்ன செய்ய

By Siva

Recommended Video

60 கேமராக்கள் இருந்தும் பிக் பாஸ் வீட்டில் பட்டப்பகலில் திருட்டு- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் 60க்கும் மேற்பட்ட கேமராக்கள் இருந்தும் திருடு போயுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் 60க்கும் மேற்பட்ட கேமராக்கள் வைத்து போட்டியாளர்களை கண்காணிக்கிறார்கள். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிறார்கள்.

அப்படி இருந்தும் பிக் பாஸ் வீட்டில் பட்டப்பகலில் திருட்டு நடந்துள்ளது.

உணவு

உணவு

காலை உணவுக்கு மும்தாஜ் தலைமையிலான சமையல் அணி சான்ட்விச் செய்தது. அனைவருக்கும் வெறும் 2 பிரெட்(ஒரு சான்ட்விச்) மட்டுமே கொடுக்கப்பட்டது. அது பத்தாமல் பாவம் பலர் பசிக்குது பசிக்குது என்று கூறியதை பார்க்க பாவமாக இருந்தது.

திருட்டு

திருட்டு

மும்தாஜ் மற்றும் மமதி சாரி சாப்பிட வைத்திருந்த சான்ட்விச்சை யாரோ திருடிவிட்டார்கள். அது யார் என்று தெரியவில்லை. இந்த திருட்டால் முதன்முதலாக மும்தாஜ் பயங்கர கோபம் அடைந்துள்ளார்.

மும்தாஜ்

மும்தாஜ்

என் சான்ட்விச்சை திருடினால் பரவாயில்லை. மற்றவர்களுக்கு சாப்பாடு கொடுக்கும் சமையல் அணியில் இருப்பதால் பொறுத்துக் கொள்வேன். ஆனால் மமதியின் சான்ட்விச்சையும் திருடியுள்ளார்கள். எல்லோருக்கும் வயிறு இருக்கிறது, பசிக்கிறது. இங்கு என்ன பேட்டரியிலா ஓடுகிறோம் என்று விளாசித் தள்ளிவிட்டார் மும்தாஜ்.

தெரியாமல் செய்திருக்கலாம்

தெரியாமல் செய்திருக்கலாம்

ஒருத்தருக்கு ஒரு சான்ட்விச் தான் என்பது பலருக்கும் தெரியாது என்று பொன்னம்பலம் தெரிவித்தார். இரண்டே இரண்டு பிரெட் பாக்கெட் தான் வந்தது என்று மும்தாஜ் கூறினார். 16 சான்ட்விச் தான் செய்துள்ளனர். அது எப்படி ஒருத்தருக்கு ஒரு சான்ட்விச் பத்தும் பிக் பாஸ்?

குறும்படம்

குறும்படம்

காணாமல் போன சான்ட்விச்சுகளை கண்டுபிடிங்க பிக் பாஸ். சான்ட்விச் திருட்டு குறித்து கமல் ஹாஸன் குறும்படம் வெளியிடுவாரா? அடுத்த வார இறுதி நாட்களில் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X