போன வாரம் மோகன் வைத்யா.. இந்த வாரம் எம்ஜிஆர்.. பிக்பாஸ் வீட்டை கலக்கிய சாண்டி!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குநரான சாண்டி நேற்று எம்ஜிஆர் போல் பேசி ஹவுஸ்மேட்ஸ்களை உற்சாகப்படுத்தினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டி, நல்ல என்டர்டெய்னராக இருந்து வருகிறார். பலரையும் கலாய்ப்பது, கிண்டலடிப்பது என பிக்பாஸ் வீட்டில் காலத்தை தள்ளி வருகிறார் சாண்டி.
இதனால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கேலி, கிண்டலால் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுடன் சாண்டிக்கு மனக்கசப்பும் ஏற்பட்டு வருகிறது.

விரட்டி விரட்டி முத்தம்
கடந்த வாரம் மோகன் வைத்யா போன்று டிரெஸ் செய்துக்கொண்டு பெண்களை விரட்டி விரட்டி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் சாண்டி. இதனால் பிக்பாஸ் வீடே அல்லோகளப்பட்டது.

மனக்கசப்பு
இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ஓபன் நாமினேஷனாக நேற்று நடைபெற்றது. இதனால் ஹவுஸ்மேட்ஸ்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது.

உன் கண்ணு நொள்ளையாகும்
இதைத்தொடர்ந்து அவர்களை குஷிப்படுத்த முயன்ற சாண்டி, எம்ஜிஆர் போல் உடையணிந்து கொண்டு, ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸிடமும் அவரைப் போலவே பேசினார். ஷெரினிடம் என்வாளும் உன் விழியும் சந்தித்தால் என்ற பாடலை பாடி என்ன ஆகும் என கேட்டார். ஆனால் அது ஷெரினுக்கு பட்டென புரியவில்லை, இதைத்தொடர்ந்து உன் கண்ணு நொள்ளையாகும் என்றார்.

புண்ணும் தெரிகிறது
பின்னர் இந்த கண்ணாடியில் கண்ணு தெரிகிறதா என்று ஷெரின் கேட்க கண்ணும் தெரிகிறது, உன் தலையில் உள்ள புண்ணும் தெரிகிறது என்று கலாய்த்தார். இதைத்தொடர்ந்து கவினிடம் சென்ற சாண்டி, வரும்போது கலகல என வந்தாய் தற்போது கொள கொள என ஆகிவிட்டாயே என்று கூறி, பெண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என லாஸ்லியாவை காண்பித்து பாடி கலாய்த்தார்.

எத்தனை ஹோம்?
பின்னர் லாஸ்லியாவிடம் சென்ற சாண்டி, தம்பி என்ன கிளாஸ்டா படிக்கிறாய், எட்டாவதா பத்தாவதா என கேட்டு கிண்டலடித்தார். பின்னர் அவர் ஓம் என்றதை ஹோம் என்று கிண்டலடித்தார் சாண்டி. இதேபோல் மதுமிதா, சேரன், சரவணன், தர்ஷன், முகென் என அனைவரிடமும் எம்ஜிஆரை போல பேசி கலகலக்க வைத்தார் சாண்டி.


Click it and Unblock the Notifications











