Bigg boss 3 tamil: சாண்டி சரவணனுடன் ஒத்து போச்சுன்னு ஏன் சொன்னார்?

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிக ஜாலியான போட்டியாளராக நடன மாஸ்டர் சாண்டி மட்டுமே இருக்கார். மற்றவர்களை குஷிப்படுத்துவதிலும் சாண்டி கையில் எது கிடைக்குதோ அதில் தாளம் தட்டி, ஆட பாட வச்சுடறார்.

கிட்டத்தட்ட சாண்டி இருக்கும் இடம் ஒரு கானா பாடல் களமா மாறிடுது. இவரது தாளத்துக்கு ஏற்ப லொஸ்லியா நல்லா டான்ஸ் ஆடறார். ரொம்ப அழகாவும் இருக்கார்.

சரவணன் மூட் அவுட்டிலிருக்கும்போது, இப்படி குடும்பம், குழந்தை என்று பேசி அவரையும் ஜாலி மூடுக்கு கொண்டு வந்துருவார். குழந்தையை பிரிந்து இருக்கும் சரவணன் சாண்டியின் பேச்சால் உற்சாகமாகி விடுவதாகவும் அவரே கூறி இருக்கார்.

மானாட மயிலாட

மானாட மயிலாட

கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாட நடன ரியாலிட்டி ஷோ மூலமாக ரொம்ப பிரபலமானார். ஆனாலும் அவரால் திரைப் படங்ககளில் அப்போது நடன மாஸ்டராகும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. உள் நாடு, வெளி நாடுகளில் நடன கலைஞர்கள் மேடையில் ஆடும் நடனங்களுக்கு கோரியோ கிராபி பண்ணுவது இப்படித்தான் பிழைப்பு நடந்துகொண்டு இருந்தது.

கஜோல் நடன இயக்குனர்

கஜோல் நடன இயக்குனர்

சன் மியூசிக் டிவியில் லைவ் ஷோ நடத்தியவர் கஜோல். இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, கஜோலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது எல்லாம் சாண்டி யார் என்று கூட கஜோலுக்குத் தெரியாது. கஜோலின் உண்மை பெயர் தமிழ்செல்வி. கஜோல் பிடிக்கும்,அதனால் பெரை மாத்தி வச்சுக்கிட்டேன்னு சொல்லி இருக்கார். சாண்டி கஜோலுக்கு நடனம் கற்றுத் தருகையில்தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து இருக்கிறது.

கலா மாஸ்டர் வர்ணிப்பார்

கலா மாஸ்டர் வர்ணிப்பார்

நடன இயக்குனர் கலா மாஸ்டர் கஜோலை கறுப்பழகி என்று அதிகம் வர்ணிப்பார். எப்போதும் கஜோல் போடும் ஒரு ஸ்டெப்பை வச்சு மானாட மயிலாட செட்டில், சாண்டி கஜோலை கிண்டல் பண்ணுவார். அப்போது இருவரும் நெருக்கம் ஆனார்கள். இருவரும் அப்போது லிவிங் டுகெதர் வாழ்க்கை ஆரம்பித்து, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார்கள். மிகமிக நெருக்கமாக இருந்து பிரபல பத்திரிகைக்கு லிவிங் டுகெதர்த்தான்னு போட்டோவுக்கு போஸ் எல்லாம் கொடுத்து நேர்காணல் கொடுத்தார்கள்.

ஒரு கட்டத்தில் பிரிவு

ஒரு கட்டத்தில் பிரிவு

கஜோல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார், சாண்டிக்கும் மானாட மயிலாட நிகழ்ச்சியை நிறுத்தியதால் அவ்வளவாக வரவேற்பு இல்லை. உடனடியாக டான்ஸ் பயிற்சி பள்ளியைத் துவக்கினார். இந்த காலக் கட்டத்தில் இருவரும் மனம் ஒத்து பிரிந்தனர். இவரின் பள்ளிக்கு டான்ஸ் கத்துக்க வந்த பெண்தான் சாண்டியின் தற்போதைய மனைவி.

காதலியின் அம்மா

காதலியின் அம்மா

ஒரு பிறந்த நாளின் போதுதான் சாண்டியிடம் லவ்வை சொல்ல, தனது அம்மாவையே அனுப்பி இருக்கார் காதலி. அவங்க அம்மா வந்து நீ இன்னிக்கு வீட்டுக்கு வந்து கட்டாயம் என்ன நடக்குதுன்னு பார்க்கணும்னு சொல்ல, சாண்டியும் மறுக்க மனமில்லாமல், அம்மா கூப்பிட்டதும் மதிப்பு தரணும்னு போனாராம். அந்த பெண் தன்மீது வைத்த காதலை அப்படி வெளிப்படுத்த, நெகிழ்ந்துதான் போனாராம் சாண்டி. அந்த நிமிடத்தில்தான் தனக்கான் பெண் இவள்தான் என்று முடிவு செய்து கல்யாணம் செய்துகிட்டார்.

சாண்டியை சைட் அடித்த பெண்கள்

சாண்டியை சைட் அடித்த பெண்கள்

சாண்டிக்கு நிறைய சின்ன பொண்ணுங்க ஃபேன்ஸா இருந்திருக்காங்க. ஆனால், அவர்களிடம் எந்தவித சில்மிஷமும் செய்யாமல் இருந்ததுக்கு பரிசாக கிடைத்ததே இப்போது அவருக்கு அருமையான மனைவி அமைந்தது. எப்போதும் பாட்டு பாடி, ஜாலியாக டான்ஸ் ஆடிக்கொண்டே இருக்கும் சாண்டி ஆர்வ கோளாறில் பல நகைச்சுவை விஷயங்களை செய்வதும் உண்டு. உதாரணமாக சொன்னால், பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் டான்ஸ் ஆடுகிறேன் என்று ஆர்வ கோளாறில் தண்ணீர் இல்லாத நீச்சல் குளத்தில் குதித்து அடிபட்டுக்கொண்டதை சொல்லலாம்.

சரவணன் சாண்டி

சரவணன் சாண்டி

நடிகர் சரவணன் சாண்டிக்கு ஏன் ஒத்துப் போச்சுன்னு கேட்டால், ரெண்டு பேருமே லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து பார்த்தவங்க. இப்போது சின்னக் குழந்தைக்கு தகப்பனாக இருக்கறதும் ஒற்றுமை. அதோடு, இருவரும் இப்போது பிக் பாஸ் வீட்டில் ஜாலியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். என்றாலும் நேற்று சரவணன் என்னப்பா ஒரே டென்க்ஷனா இருக்குன்னு கேமிராவைப் பார்த்து பேச ஆரம்பிச்சுட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X