பிக்பாஸ் கேட்ட ஒரு கேள்வி.. கதறி கதறி அழுத சாண்டி! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் கேட்ட ஒரு கேள்வியால் சாண்டி கதறி அழுதது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
பிக்பாஸ் வீடு கடந்த ஒரு வாரமாக ஆண் பெண் என்ற பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமானது. இதனால் கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு சண்டைக்கடை போல் இருந்தது.
இந்நிலையில் சக ஹவுஸ்மேட்ஸ்கள் கொடுத்த டார்ச்சரால் மதுமிதா தனது கையை அறுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்தார் பிக்பாஸ்.

சென்டிமென்ட் பதில்
அதன்படி ஹவுஸ்மேட்ஸ்கள் ஒவ்வொருவரையும் அழைத்து கேள்விகள் கேட்டார் பிக்பாஸ். அதற்கு அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களுமே சென்டிமென்ட்டாகதான் பதில் கூறினர்.

தர்ஷன் குடும்பம்
லாஸ்லியாவின் பதில் கவினை சுற்றியே இருந்தது. இதேபோல் தர்ஷன் தனது அம்மா மற்றும் குடும்பத்தினரை குறிப்பிட்டு பேசினார்.

தாய் வீடு
முகெனும் தனது குடும்பம் குறித்து பேசினார். கவினும் தனது அம்மா அப்பா குறித்தே பேசி வந்தார். வனிதா பிக்பாஸ் வீட்டை பற்றி பேசினார். பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வருவது தனது தாய் வீட்டிற்கு வந்ததுபோல் இருப்பதாக கூறினார்.

அடையாளம் தெரியுமா?
சாண்டி தனது மகள் குறித்து பேசினார். அப்போது பல இடங்களில் அவர் கண்ணீர்விட்டு அழுதார். அப்பா என்று அடையாளம் தெரியும் நேரத்தில் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துவிட்டேன். இப்போது போனால் என்னை அடையாளம் தெரியுமோ என்னவோ? என்னிடம் வருவாளா மாட்டாளா என்று கூட தெரியவில்லை என்று கூறி அழுதார்.

கதறிய சாண்டி
பின்னர் இப்போது உங்கள் கண்முன் உங்கள் குழந்தை லாலாவை காட்டினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார் பிக்பாஸ். அதற்கு பதிலளித்த சாண்டி, கையெடுத்து கும்பிடுவேன் என்று கூறி கதறினார். தொடர்ந்து தனது மகளை பற்றியே பேசி கண்ணீர்விட்டார் சாண்டி.


Click it and Unblock the Notifications











