சாண்டி பொண்ணு பிக்பாஸ் வீட்டுக்கு போட்டுவந்த டி ஷர்ட்ட கவனிச்சீங்களா?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாண்டியின் மகள் அணிந்திருந்த டி ஷர்ட் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்கு இன்று சாண்டியின் குடும்பத்தினர் வந்துள்ளது புரமோவில் தெரியவந்துள்ளது. சாண்டி தனது மகள் லாலாவை ரொம்பவே மிஸ் செய்வதாகவும் தனது மகளை பார்க்க தன்னை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் பிக்பாஸிடம் கூறி வந்தார்.
இந்நிலையில் இன்று சாண்டியின் மனைவியையும் மகள் லாலாவையும் அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ். கதவு திறந்ததும் தனக்காக காத்திருந்த தந்தையிடம் தத்தி தத்தி நடந்தபடியே வந்தார் லாலா.

உருகிய ஹவுஸ்மேட்ஸ்
தனது மகளை நெஞ்சோடு நெஞ்சாக வாரி அணைத்தப்படி ஆனந்த கண்ணீர்விட்டார் சாண்டி. இதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களும் உருகினர்.

டி ஷர்ட்டில் குருநாதா
இந்நிலையில் சாண்டியின் மகள் லாலா அணிந்திருக்கும் டி ஷர்ட் வைரலாகியுள்ளது. அதாவது, லாலா அணிந்திருக்கம் டி ஷர்ட்டில் குருநாதா என அச்சிடப்பட்டுள்ளது

குருநாதா குருநாதா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, சாண்டி, கவின், முகென், தர்ஷன், லாஸ்லியாவை ஆகியோர் வீ ஆர் த பாய்ஸ் என்று கூறி ஒரே மாதிரியான டி ஷர்ட்டை அணிந்து வருகின்றனர். பிக்பாஸை சாண்டி குருநாதா குருநாதா என்றே அழைத்து வருகிறார்.

அசத்திய லாலா
பாய்ஸ் கேங்கை சேர்ந்தவர்கள் குருநாதா என்று அச்சிடப்பட்ட டி ஷர்ட்டை அணிந்திருந்தனர். இந் நிலையில் இன்று லாலாவும் அப்படி ஒரு டி ஷர்ட்டை அணிந்து வந்து அசத்தியிருக்கிறார்.
இனி கவலையில்லை
லாலா குட்டி.. க்யூட்டி பீ.. குருநாதா டி ஷர்ட்.. அப்பாக்கிட்ட இருந்து மத்தவங்கக்கிட்ட வரமாட்டேங்குறா.. சாண்டி இனிமே கவலையில்லை.. செம ஹேப்பியா இருங்க என்கிறார் இந்த நெட்டிசன்.
கவனிச்சீங்களா?
லாலா குருநாதா டி ஷர்ட் போட்டிருப்பதை எத்தனை பேர் கவனீச்சிங்க என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











