ஆரிரோ.. ஆராரிரோ.. இது தந்தையின் தாலாட்டு.. சாண்டி எதிர்பார்த்த அந்த நாள்.. கண்ணீரில் பிக்பாஸ் வீடு!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் சாண்டியின் குடும்பத்தினர் வந்திருப்பதால் பிக்பாஸ் வீடு உணர்ச்சி பிழம்பாக காட்சியளிக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறும் ஃபிரீஸ் டாஸ்க்கை முன்னிட்டு போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து செல்கின்றனர். இதனால் பிக்பாஸ் வீடு உணர்ச்சி பிழம்பாக காட்சியளிக்கிறது.
காலையில் வெளியான முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கவினின் நண்பர், அவரை ஓங்கி அறைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

சாண்டியின் மகள் லாலா
அதில் சாண்டியின் மகளும் மனைவியும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, கையில் பொம்மையுடன் என்ட்ரியாகிறார் சாண்டியின் மகள் லாலா.

வாரி அணைத்து முத்தம்
தனது மகளை பார்த்த சாண்டி கதறி அழுகிறார். தொடர்ந்து மகளை கட்டி அணைத்து, கண்ணீர் விட்டபடியே தனது மனைவியையும் வாரி அணைத்து முத்தம் கொடுக்கிறார்.

கதறிய சாண்டி
சாண்டி தனது மகள் லாலா மீது மிகுந்து பாசம் கொண்டவர் என்பது நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே தெரிந்தது. தனது பிறந்த நாளின் போது ஒளிபரப்பப்பட்ட தனது மகளின் வீடியோவை பார்த்து கதறினார் சாண்டி.

இப்படியே விட்டுவிடுங்கள்
அதனை பார்த்து பார்வையாளர்களும் கலங்கினர். பின்னர் கன்ஃபெஷன் ரூமில் பிக்பாஸிடம் பேசிய போதும் கூட என்னை இப்படியே விட்டால் என் மகளை பார்க்க போய்விடுவேன் என கூறினார்.

உணர்ச்சி பிழம்பில் பிக்பாஸ் வீடு
இந்நிலையில் தனது மகளின் வருகைக்காக காத்திருந்த சாண்டியின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியிருக்கிறது. தனது மகளை சாண்டி கொஞ்சும் போது ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடும் உணர்ச்சிவசப்பட்டு அமைதி காக்கிறது.


Click it and Unblock the Notifications











