இருக்கு இன்னைக்கும் என்டர்டெய்ன்மென்ட் இருக்கு.. முன்னணி நடிகை இமிடேட் செய்யும் சாண்டி!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 37 : Promo 1 : லாஸ்லியாவுக்கு ஜானு கெட்டப்பா?- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குநர் சாண்டி முன்னணி நடிகர் ஒருவரை இமிடேட் செய்து கலக்கியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் கொஞ்சமாவது என்டர்டெய்ன்மென்ட் இருக்கு என்றால் அது சாண்டி மாஸ்டரால் தான். எல்லோரையும் முகத்துக்கு முன்பாகவும் பின்னாலும் கலாய்ப்பதில் வல்லவராக உள்ளார் சாண்டி.

இதனால் சிலருக்கு மன உளைச்சல், சிலருடன் மனக்கசப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாண்டி தனது ரூட்டை மாற்றியுள்ளார். அதாவது ஒவ்வோரு நாளும் ஒரு பிரபலத்தை போல் மிமிக்ரி செய்து ஹவுஸ் மேட்ஸ்களுடன் பழகி வருகிறார்.

தொப்பையும் தொந்தியுமாக

தொப்பையும் தொந்தியுமாக

ஏற்கனவே மோகன் வைத்யா போல கெட்டப்பை மாற்றி, தொப்பையும் தொந்தியுமாக நெற்றியில் பட்டை, கண்ணில் கண்ணாடி என ஆளே மாறினார் சாண்டி. அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களை விரட்டி விரட்டி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

சாண்டியின் வேடிக்கை

சாண்டியின் வேடிக்கை

மோகன் வைத்யா போன்ற இந்த நடவடிக்கையால் மிரண்டு ஓடினர் ஹவுஸ் மேட்ஸ்கள். தொடர்ந்து சண்டை, சச்சரவு, அழுகை என இருந்த பிக்பாஸ் சாண்டியின் வேடிக்கையால் அவ்வப்போது சிரிக்கும் வகையாகவும் இருந்து வருகிறது.

ரசித்த பார்வையாளர்கள்

ரசித்த பார்வையாளர்கள்

நேற்று பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெற்றதால் ஹவுஸ்மேட்ஸ்கள் மன வருத்தத்தில் இருந்தனர். அதனை மாற்றும் வகையில் நேற்று எம்ஜிஆரை போல் வேடமிட்டு கலகலப்பாக்கினார் சாண்டி. இதனை ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் வெகுவாக ரசித்தனர்.

ஒவ்வொரு கெட்டப்

ஒவ்வொரு கெட்டப்

இந்நிலையில் இன்றைய புரமோவின்படி பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பிக்பாஸ் ஒவ்வொரு நடிகரின் கெட்டப்பை கொடுத்துள்ளார். அதன்படி சரவணன் விஜயகாந்தை போலவும், சாண்டி சிம்புவை போலவும் லாஸ்லியா திரிஷா போலவும் வலம் வருகின்றனர்.

சிம்புவாக மாறிய சாண்டி

சிம்புவாக மாறிய சாண்டி

இந்த கெட்டப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட சாண்டி, சிம்புவை போல் பேசி, நடனமாடி அசத்தி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்றும் சாண்டியால் பிக்பாஸ் வீட்டில் நல்ல என்டர்டெய்ன்மென்ட் இருக்கு என இப்போதே குஷியாகிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X