பிக்பாஸ் வீட்டிற்குள் படு அசத்தலாக வந்த ஐஸ்வர்யா தத்தா.. பட்டென அசிங்கப்படுத்திய சாண்டி!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று வருகை தந்த ஐஸ்வர்யா தத்தா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கடந்த சீசனில் பங்கேற்று ரன்னர் அப் ஆன நடிகை ஐஸ்வர்யா தத்தா கலந்துகொண்டார். குரு படத்தின் நான் முத்தம் தின்பவள் பாடல் பின்னணியில் படு அசத்தலாக வந்தார் ஐஸ்வர்யா தத்தா.
நீல நிற மாடர்ன் உடையில் கீழே தொடை தெரியவும், மேலே ஸ்ட்ராப்லஸ் டாப்புடன் ஒய்யாரமாக வந்தார் ஐஸ்வர்யா தத்தா. வந்த வேகத்தில் பின்னணியில் ஒலித்த பாடலுக்கு ஹவுஸ்மேட்ஸ்களுடன் சேர்ந்து செமயாக ஆட்டம் போட்டார்.

பழைய சம்பவங்கள்
பின்னர் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸையும் ஆரத்தழுவி வாழ்த்து கூறினார். பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களுடனும் சென்ற ஐஸ்வர்யா தத்தா, கடந்த சீசனில் ஹிட்லர் டாஸ்க்கின் போது பாலாஜி மீது குப்பைகளை கொட்டிய சம்பவங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டார்.

அழைத்த பிக்பாஸ்
தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ்களுடன் பேசிய ஐஸ்வர்யா தத்தா, நடிகர் ஆரியுடன் நடித்துள்ள அலேகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹவுஸ்மேட்ஸ்களை வைத்து வெளியிட செய்தார். அப்போது பிக்பாஸ் அழைக்கவே ஸ்டோர் ரூமுக்குள் சென்றார் ஐஸ்வர்யா தத்தா.

நிறைய குப்பை இருக்கு
அப்போது வரும்போது கிச்சன் வழியாக வா, என்ற சாண்டி கிச்சனில் நிறைய குப்பை இருக்கிறது என்றார். சாண்டி அப்படி கூறியதற்கு காரணம் ஐஸ்வர்யா தத்தா அணிந்திருந்த உடைதான். அவரது மாடர்ன் உடை ஒரு பக்கம் தொடை வரையும் மறுபக்கம் தரையில் பிரளும்படி நீண்டும் இருந்தது.

அசிங்கப்படுத்திய சாண்டி
இதனை கிண்டல் செய்யும் வகையில் கிச்சன் வழியாக வந்தால் குப்பையையும் பெறுக்கிவிடுவார் என்ற ரீதியில் கூறினார் சாண்டி. அதுமட்டுமின்றி, ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டில் இருந்து புறப்படும் போதும், அவரது உடையை தூக்கிப்பிடித்து அசிங்கப்படுத்தினார் சாண்டி.

முட்டை காய்ந்திருக்கும்
பின்னர் அந்த உடையை தர்ஷனிடம் கொடுத்துவிட்டு முகெனும் சாண்டியும் அவரை தூக்கி செல்வது இரண்டு பக்கமும் அவரது கைகளை பிடித்து சென்றனர். அப்போது ஐஸ்வர்யா தத்தா என் டிரெஸ் டிரெஸ் என்று கூப்பாடு போட்டும் கண்டுகொள்ளாத அவர்கள் வாசல் வரை கொண்டுவிட்டனர். ஐஸ்வர்யா அந்தப்பக்கம் போன கையோடு முட்டை காய்ந்திருக்கும் என்று கூறியபடி அனைவரையும் உள்ளே சென்றார் சாண்டி.


Click it and Unblock the Notifications











