'நைனா'வாக மாறி பெண் போட்டியாளர்களை விரட்டி விரட்டி முத்தமிட்ட சாண்டி

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 29 : Promo 3 : வைதி HUG பண்றது புடிக்காது- லொஸ்லியா - வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் மோகன் வைத்யா இல்லாத குறையை தீர்த்து வைத்துவிட்டார் சாண்டி மாஸ்டர்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருப்பவர்களில் சாண்டி மாஸ்டர் மட்டும் தான் தினமும் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார். சக போட்டியாளர்களை கலாய்ப்பதுடன் சில சமயங்களில் பிக் பாஸையே கிண்டல் செய்கிறார்.

மோகன் வைத்யா கிளம்பிச் சென்றுவிட்டாரே இனி யார் பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடிப்பது என்றார்கள் பார்வையாளர்கள். அவர்கள் பேசியது பிக் பாஸுக்கு கேட்டுவிட்டது.

சாண்டி

நேற்று சாண்டி மாஸ்டர் நைனா மோகன் வைத்யாவாக மாறி வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்களை ஓடியோடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.யோவ் சாண்டி, இது தான் சான்சுன்னு நைனா பெயரை சொல்லி அனைத்து பெண்களுக்கும் முத்தம் கொடுத்துவிட்டியே என்கிறார்கள் பார்வையாளர்கள். நைனா தினம் தினம் செய்த சேட்டைகளை எல்லாம் அவர் போன்றே உடை அணிந்து, தொப்பை வைத்துக் கொண்டு நேற்று சாண்டி அட்டகாசம் செய்து விட்டார்.

முத்தம்

முத்தம்

மோகன் வைத்யா மறந்து விட்டுச் சென்ற பூப்போட்ட டிரவுசரை கையில் வைத்துக் கொண்டு நைனா ஓ நைனா போயிட்டியே நைனா என்று சாண்டி பாட்டு பாடினார். அதை பார்த்த மீரா மிதுனோ நீ பாடுவதை பார்த்தால் ஃபீல் பண்ணுவது போன்று சந்தோஷமாக இருப்பது போன்று தெரிகிறதே என்றார். சாண்டி பெண் போட்டியாளர்களை விரட்டி விரட்டி கட்டிப்பிடித்தபோது தான் மோகன் வைத்யா செய்த அட்டகாசங்கள் எல்லாம் மீண்டும் நினைவுக்கு வந்தது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

உம்ம்மா உம்மா உம்மா என்று சவுண்டு எஃபெக்ட் கொடுத்துக் கொண்டே முத்தமிட்டார் சாண்டி. கவின் நைனா என்று கூறி கட்டிப்பிடிக்க வந்தபோது எல்லாம் கையை தட்டிவிட்டு சென்றுவிட்டார் சாண்டி. சாண்டி அபிம்மா அபிம்மா என்று கூறி அபிராமியை கட்டிப்பிடித்து முத்தமிட விரட்டியதை பார்த்து சக போட்டியாளர்கள் மட்டும் அல்ல பார்வையாளர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

தர்ஷன்

தர்ஷன்

ஷெரினை பார்த்ததும் சாண்டிக்கு எதிரே நின்ற இயக்குநர் சேரன் கண்ணுக்குத் தெரியவே இல்லை. ஷெரினை விரட்டிச் சென்று கட்டிப்பிடித்து முத்தமிட்ட பிறகே சேரனிடம் பேசினார் சாண்டி. சாண்டியின் இந்த சேட்டையால் நேற்று சில நிமிடங்கள் நிகழ்ச்சி ஜாலியாக இருந்தது. சாண்டி தர்ஷனுக்கு பாசமாக முத்தம் கொடுத்தார். மை சன் என்று கூறி முத்தமிட்டார். தர்ஷனை முத்தமிட்ட பிறகு கவினை கட்டிப்பிடித்தார் சாண்டி. சாண்டி மாஸ்டர் தயவு செய்து தினமும் இப்படி யாரையாவது கலாய்த்து எங்களை சிரிக்க வைங்க. நல்லா இருக்கு மாஸ்டர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X