இதுவும் இனவெறி போன்றதுதான்.. மதுமிதாவின் உருவத்தையும் முக அமைப்பையும் சாண்டி கிண்டல் செய்தது சரியா?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் சாண்டி மதுமிதாவின் உயரத்தையும் முக அமைப்பையும் கிண்டல் செய்ததை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களை தாண்டிவிட்டது. இதுவரை மதுமிதா இப்படி கோபப்பட்டு பார்த்ததில்லை.
நேற்று மிகவும் கோபப்பட்ட மதுமிதா, சாண்டியை விளாசிவிட்டார். இத்தனை நாட்களாக எல்லா சூழலையும் மிகவும் கூலாக ஹேண்டில் செய்து வந்த மதுமிதா நேற்று கோபப்பட்டது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

மக்களின் அபிமானம்
மதுமிதாவுக்கு எதிராக வனிதா தலைமையில் கேங்க ஃபார்ம் ஆகி சண்டை போட்ட போதுகூட அந்த சூழ்நிலையை மிகவும் அமைதியாக கையாண்டார் மதுமிதா. இதனால் மக்களின் அபிமானத்தை பெற்றார்.

சாண்டி, சாக்ஷி டாஸ்க்
அப்படிப்பபட்ட மதுமிதா நேற்று பொங்கியதன் காரணம், அவரது முகத்தில் பேஸ்ட்டை தடவி விட்டு ஹெவியாக டான்ஸ் ஆட வேண்டும் என சாண்டி, கவின், சாக்ஷி ஆகியோர் கொடுத்த டாஸ்க்தான்.

சிரித்த சாண்டி
தனக்கு உடம்பு சரியில்லை, சீக்கிரம் அனுப்புங்கள் பாத்ரூம் செல்ல வேண்டும் என மதுமிதா கூறியும் ஹெவியா ஆடிவிட்டு போ என்றார் சாண்டி. முடியாமல் தவித்த மதுமிதாவை பார்த்து சிரித்தார் சாண்டி.

இது வேற நடந்திருக்கு
இதனால் கடும் கோபமடைந்த மதுமிதா பொறுமையை இழந்து சாண்டி மீது பாய்ந்தார். மதுமிதாவின் கோபத்திற்கு நேற்றைய டாஸ்க் மட்டும் காரணம் அல்ல. கடந்த 30 நாட்களாக மதுமிதாவின் உயரத்தையும் முக அமைப்பையும் கிண்டல் செய்துள்ளனர் கவினும் சாண்டியும்.

எல்லை மீறிய கிண்டல்
இதனை ஒரு கட்டம் வரை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார் மதுமிதா. இந்த கிண்டலும் கேலியும் எல்லை மீறவே நேற்று பொங்கிவிட்டார் மதுமிதா.

ஏற்றுக்கொள்ளவே முடியாது
கேலிக்கும் கிண்டலுக்கும் ஒரு அளவிருக்கிறது அல்லவா? ஒருவரின் முக அமைப்பு, உயரம் இவை அனைத்தும் இயற்கையாக அமைவது. அவற்றை வைத்து கிண்டல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததுதான்.

பாலில் போட்ட உப்பு
நகைச்சுவை உணர்வு மிக்கவர், அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார் என கமல்ஹாசன் அண்மையில் சாண்டியை புகழ்ந்தார். இந்நிலையில் ஒருவரின் உடலமைப்பை வைத்து பாட்டு பாடி சாண்டி கிண்டல் செய்தது சரியா? இத்தனை நாட்கள் சாண்டி பெற்ற பெயரெல்லாம் நேற்று ஒரே நாளில் பாலில் போட்ட உப்பாகி விட்டது.

இதுவும் இனவெறி போன்றதுதான்
நடிகர் சூர்யாவின் உயரத்தை டிவி தொகுப்பாளினிகள் இரண்டு பேர் கிண்டல் செய்ததால் கொதித்து போயினர் அவரின் ரசிகர்கள். இதேபோல் தமிழக பாஜக தலைவர் தமிழிசையையும் அவரது தலைமுடியை வைத்து சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கின்றனர். என்றுதான் மாறுமோ இந்த அவலம்? இதுவும் இனவெறி போன்ற ஒரு வகையான வெறிதான்!


Click it and Unblock the Notifications











