கமல் முன்பு வனிதாவை வச்சு செய்த சாண்டி.. அதிர்ந்த அரங்கம்.. வேற லெவல்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 104 :வனிதாவை பாங்கமாக கலாய்த்த சாண்டி

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டி வனிதாவை கமலின் முன்பு மரண கலாய் கலாய்த்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் கமல் கலக்கலாக தோன்றி யார் வெற்றியாளர் என்று தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதாக கூறினார்.

தற்போது இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்ட வனிதாவை வச்சு செய்துள்ளார்.

வேற 4 பேர்

வேற 4 பேர்

அந்த புரமோவில் காட்டப்பட்டிருப்பதாவது, சாண்டி என கமல் அழைக்க.. சார் நான் 4 பேர் டைட்டில் வின் பண்ணியிருந்தா என்ன பேசியிருப்பாங்கன்னு பேசப்போகிறேன் என்கிறார். அதற்கு கமல், இந்த நான்கு பேரா என கேட்க, இல்லை சார் வேற 4 பேர் என்று கூறுகிறார்.

யு ஷட் அப்யா

யு ஷட் அப்யா

அப்போது முகென், வனிதா அவர்களுக்கு இந்த கோப்பை வழங்கப்படுகிறது வாங்க வனிதா என அழைக்க, வனிதாவாக மாறுகிறார் சாண்டி. அப்போது ஷெரின், வனிதா பேபி என கத்த வனிதா ஸ்டைலில் யு ஷட் அப்யா என்கிறார் சாண்டி.

சண்டை போட்டதே இல்ல

சண்டை போட்டதே இல்ல

மேலும் சார் எனக்கு கத்தி பேசல்லாம் தெரியாது. சண்டைன்னு இதுவரைக்கும் இந்த வீட்டுல நான் போட்டதே இல்லை யார்க்கிட்டயுமே. இந்த வீட்டுல நான் சமாதானப் புறா. சமாதானப்புறாவுக்கு இன்னொரு பெயர் வனிதான்னு சொல்வாங்க இப்படி பேசி வனிதாவை வேற லெவலில் கலாய்த்திருக்கிறார்.

வனிதா அலப்பறை

வனிதா அலப்பறை

வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதெல்லாம் அவர் சத்தம் மட்டும்தான் கேட்டுவந்தது. பிக்பாஸ் வீடு தன்னுடைய வீடு என்பது போல அலப்பறை பண்ணுவார் வனிதா. தான் மட்டும்தான் பேச வேண்டும் மற்றவர்கள் யாரும் பேசக்கூடாது என்பது போல நடந்து கொள்வார்.

சண்டை மூட்டிவிடுவது

சண்டை மூட்டிவிடுவது

மேலும் பிக்பாஸ் வீட்டில் நடந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்துவரும் வனிதாதான். கொளுத்தி போடுவது, சண்டை போடுவது என மிரட்டி வந்தார். இதனால் அவரை சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு கழுவி ஊற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X