Bigg Boss Tamil 3:வழுக்கி விழுந்து அடிபட்டு சாண்டிக்கு 4 தையல் பாஸ்
சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் முதல் நாளே காயத்துடன் ஆரம்பித்துள்ளது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாண்டி மாஸ்டர் நீரில்லா நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டு விழுந்து மயங்கியது போன்று நேற்று ப்ரொமோ வீடியோ வெளியிட்டார்கள்.
ப்ரொமோவில் காட்டுவது ஒன்று நிஜத்தில் நடப்பது ஒன்று என்பது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தபோது பிக் பாஸ் வழக்கம் போன்று பித்தலாட்டம் செய்தது தெரிந்துவிட்டது.

டான்ஸ்
காலையில் பிக் பாஸ் பாட்டு போட்டு அனைவரையும் எழுப்பிவிட தங்களுக்கு தெரிந்த ஸ்டெப்ஸை போட்டு ஆடினார்கள். நம்ம சாண்டி தான் டான்ஸ் மாஸ்டர் ஆச்சே. அதனால் அம்சமாக ஆடினார். ஆர்வக்கோளாறில் நீரில்லா நீச்சல் குளத்தில் ஆடி வழுக்கி விழுந்தார். இருப்பினும் ஆட்டத்தை தொடர்ந்தார். அதை பார்த்தபோது அட பிக்கு பாஸ் சாண்டி மாஸ்டர் நல்லாத் தானே இருக்கிறார், ஏதோ தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்ப வேண்டிய நிலையில் இருப்பது போன்று ப்ரொமோ வீடியோவில் காட்டினீரே என்று திட்டாமல் இருக்க முடியவில்லை.

டாக்டர்
நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்ததில் சாண்டி மாஸ்டரின் நாடியில் காயம் ஏற்பட்டது. அதற்கு மருந்து போட்ட அவர் உடனே டாக்டரை அனுப்பி வைங்க பிக் பாஸ் என்று கோரிக்கை விடுத்தார். இதை பார்த்த கவினும் சாண்டிக்கு ஆதரவாக பிக் பாஸிடம் கோரிக்கை விடுத்தார். வீட்டில் உள்ள அனைவருக்கும் ரத்தக்காயம் ஏற்படுத்தினால் தான் டாக்டர் வருவார் போலயே என்று சாண்டி நொந்து கொண்டார்.

சிகிச்சை
ஒரு வழியாக சாண்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு நாடியில் 4 தையல் போடப்பட்டுள்ளது. அதை பார்த்த கவினோ, நினைச்சேன், குறைந்தது 3 தையலாவது போடுவாங்கன்னு நினைச்சேன் என்றார். முதல் நாளே காயம், தையல் என்று ஆரம்பித்துள்ளது. போகப் போக என்னாகுமோ தெரியவில்லை. சாண்டி, உங்களை வச்சு தான் நிறைய பிளான் இருக்கு, இப்படி எல்லாம் அடிபடக் கூடாது. பார்த்து சூதானமா இருங்க மாஸ்டர்.

வார்த்தை
சாண்டியின் செயல்கள் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. இருப்பினும் அவர் ஓவராக பேசுவதாக நினைக்கிறார்கள். சாண்டி கொஞ்சம் வாயை அடக்கினால் நல்லது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் சாண்டியிடம் எதிர்பார்ப்பது டான்ஸ் தான். அவர் அடிக்கடி டான்ஸ் ஆடி மகிழ்விக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











