Bigg boss 3 tamil: சாண்டி தம்பி.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்பா!

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அந்த வீட்டில் பதினாறு ஹவுஸ் மேட்களில் ஒருத்தர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவருக்கு திருமணமாகி ஒன்றரை அல்லது இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது..

இவரைப் போலவே நடிகர் சரவணனின் இரண்டாவது மனைவிக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை. அவருக்கு அந்த குழந்தை ரொம்பவும் தாமதமாக பிறந்த குழந்தை. எப்படி தாமதம் என்றால்...

அதாவது அவரின் முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால், இரண்டாவது மனைவி மூலம் குழந்தை பிறந்து இருக்கிறது. இருவருக்குமே குழந்தைகளை பிரிந்து பிக் பாஸ் வீட்டில் இருப்பது கஷ்டம்தான்.

நேற்று சாண்டிக்கு

நேற்று சாண்டிக்கு

நேற்று சாண்டிக்கு பிறந்தநாள், வீட்டிலிருந்து கிரீட்டிங் கார்ட்ஸ் அனுப்பி இருக்காங்க. குழந்தை, மனைவி சாண்டியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வீடியோவை சாண்டிக்குப் போட்டு காண்பித்து குஷிப்படுத்தி இருக்காங்க பிக் பாஸ். இதுக்கு நடுவுல அருமையான கேக் அனுப்பி சாண்டியை ஹவுஸ் மேட்ஸுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடவும் வைத்து அழகு பார்த்து இருக்கிறார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும்?

கொஞ்சம் ஓவர்

கொஞ்சம் ஓவர்

சாண்டி கொஞ்சம் ஓவர் என்று சொல்வது போல, குழந்தையின் வீடியோவைப் பார்த்து, ஓ..ன்னு சத்தம் போட்டு அழறார் சாண்டி. போன சீசனில் விஜயலட்சுமி 8 மாத கைக் குழந்தையை விட்டுட்டு வந்து பல டாஸ்க்குகளைச் செய்தார்.குழந்தையை நேரில் பார்த்தபோது அழுதார். ஆனால், சாண்டி குழந்தை அழு குரல் கேட்டுச்சு...அவ்ளோதான் அப்போ அழ ஆரம்பிச்சவர்தான்.

இவ்வளவு கூடாது

இவ்வளவு கூடாது

குழந்தையைப் பெத்த தாயுடன் விட்டுட்டு வந்தாச்சு. இதுவே வெளியூர் வெளிநாடு ஷூட்டிங் என்றால் குழந்தையை பிரிந்து இருக்க மாட்டீர்களா? அங்கே போயி இப்படித்தான் அழுதுகிட்டு இருப்பீங்களா. சாண்டி பிறந்த நாளில் பிக் பாஸ் வீடே என்னவோ சோக சம்பவம் மாதிரி அழுதுகிட்டு இருக்காங்க. அப்போ பொண்டாட்டி, குழந்தைகளை விட்டுட்டு வெளி நாட்டு வேலை பார்க்கறவங்க நாட்டின் எல்லையை காத்து நிற்கும் வீரர்களுக்கு குடும்பமே இல்லையா?

சேர்ந்து சீன் போடறீங்க?

சேர்ந்து சீன் போடறீங்க?

அவர்தான் பக்கத்துல நீங்க எல்லாரும் ஏத்திவிட ஏத்திவிட அவர் சத்தமிட்டு அழறார். நீங்களும் ஆளாளுக்கு சீன் போட்டு அழறீங்க. இல்ல தெரியாமத்தான் கேட்கறேன்..பிக் பாஸ் வீட்டுக்கு வந்து ரெண்டு வாரத்துக்குள்ள அப்படி என்னதாங்க பிக் பாஸ் மிஸ் பண்ண வச்சுட்டாங்க.

பக்குவம் இல்லை

பக்குவம் இல்லை

சாதிக்கப் பிறந்தவன்னு சொல்றீங்க...சினிமாவுக்கு, விழா மேடைகளுக்கு டான்ஸ் கோரியோ கிராப் பண்ண வீட்டை விட்டு வெளிநாட்டு,வெளியூர் போனதே இல்லையா? பாசமில்லைன்னு சொல்லலை.பக்குவம் இல்லைன்னு சொல்றேன். சாண்டி ஒன்னும் சின்ன வயசு பையன் இல்லை. பக்குவப்பட்ட முப்பதுகளில் இருக்கும் மனிதர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X