பிக்பாஸ் வீட்டில் ஆட்டம் போட்ட சாண்டி பேபி லாலா.. அப்ளாஸை அள்ளிக்கொடுத்த பார்வையாளர்கள்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 82 : Sandy Family visit BB House

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு வந்த சாண்டியின் மகள் லாலா நேற்று போட்ட ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கவினின் நண்பர், ஷெரினின் குடும்பத்தினர் மற்றும் சாண்டியின் குடும்பத்தினர் பங்கேற்றது ஒளிபரப்பப்பட்டது.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதலே எனது மகள் என்னை மறந்திருப்பாள், அவள் என்னை பார்த்து என்னிடம் வராமல் போனால் நான் ரொம்பவே கஷ்டப்படுவேன் என்று கூறி கண்ணீர் விட்டார் சாண்டி.

ஃபுல் மேக்கப்பில் சாண்டி

ஃபுல் மேக்கப்பில் சாண்டி

இந்நிலையில் நேற்று சாண்டியின் மகள் லாலாவும் அவரது மனைவி சில்வியாவும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். மகள் மற்றும் மனைவியின் வருகைக்காக மாலை முதலே ஃபுல் மேக்கப்புடன் காத்திருந்தார் சாண்டி.

ஓடி வந்த லாலா

ஓடி வந்த லாலா

மாலை 5 மணி முதலே சாண்டியை காக்க வைத்த பிக்பாஸ், இரவு 8 மணி வாக்கில் முதலில் லாலாவை உள்ளே அனுப்பினார். கையில் பொம்மை, குருநாதா டி ஷர்ட் என அசத்தலாக வந்த லாலா, தனது அப்பாவை பார்த்து ஓடி வந்தாள்.

கலங்கிய சாண்டி

கலங்கிய சாண்டி

இந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்த சாண்டி தன் மகளை நெஞ்சோடு வாரி அணைத்து முத்தமிட்டார். ஆனாலும் சில விஷயங்களை மறந்துவிட்டாள் என கண் கலங்கினார் சாண்டி.

புத்திசாலித்தனம்

புத்திசாலித்தனம்

பின்னர் மகளுடன் ஓடி பிடித்து விளையாடினார் சாண்டி. சோஃபாவில் ஏற திட்டமிட்ட சாண்டி பேபி லாலா படு புத்திசாலித்தனமாக தலையணையை கீழே போட்டு அதன் மீது ஏறி சோஃபாவில் அமர்ந்தது. இதனை பார்த்த ஹவுஸ் மேட்ஸ்கள் இப்பவே என்ன விவரம் பார்த்தீர்களா என கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

டான்ஸ் ஆடிய லாலா

டான்ஸ் ஆடிய லாலா

தொடர்ந்து சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோர் தாளம் போட தாளத்திற்கு ஏற்றது போல் நடனமாடினாள் லாலா. கைகளை தூக்கியும் உடம்பை அசைத்தும் அசத்தினாள் லாலா. இதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் பிரமித்து போயினர்.

நெட்டிசன்கள் புகழாரம்

நெட்டிசன்கள் புகழாரம்

சாண்டி ஒரு டான்ஸ் மாஸ்டர். ஹெவி மூவ்மெட்ஸ்களையும் படு அசால்ட்டாக போட்டு ஆச்சரியப்பட வைப்பார். அப்படிப்பட்ட அப்பாவின் மகள் இப்படிதான் இருப்பார் என நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X