வனிதாவுக்கு எதிராக வாயை திறந்த சாண்டி.. முன்னாள் பொண்டாட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை எதிர்த்து சாண்டி கேள்வி கேட்டிருப்பது குறித்து அவரின் முன்னாள் மனைவி காஜல் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விருந்தாளியாக வந்துள்ள வனிதா ஹவுஸ்மேட்ஸ்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். இதனால் பிக்பாஸ் வீடு ரணகளமாகியுள்ளது.
முகெனின் மீது காதல் கொண்டு பைத்தியமாக இருந்தார் அபிராமி. அவரையே பேச வேண்டிய விதத்தில் பேசி மாற்ற வேண்டிய விதத்தில் மாற்றி முகெனிடம் சண்டை போட வைத்து விட்டார் வனிதா.

எதிர்க்கும் சாண்டி
இதனால் பிக்பாஸ் வீட்டில் இன்று பெரும் களேபரம் நடந்ததேறியுள்ளது. இவை இன்று வெளியாகி வரும் புரமோக்கள் வழியாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் வனிதாவை எதிர்த்து பேசுகிறார் சாண்டி.

கலவர பூமி
இதுவரை அமைதி பூங்காவாக இருந்த பிக்பாஸ் வீடு மீண்டும் கலவரபூமியாகியுள்ளது. முகெனையும் அபிராமியையும் பகடைக்காயாய் ஆக்கி விளையாடி வருகிறார் வனிதா.

வனிதாவை கத்திய சாண்டி
இதனை கண்டுபிடித்த சாண்டி, நேற்று என்ன சொன்னீங்க இன்னைக்கு என்ன செய்றீங்க? எல்லாத்தையும் நோன்டி பெரிசாக்குறீங்க என்று வனிதாவிட்ம் கத்தியபடியே அந்த இடத்தைவிட்டு நகர்கிறார்.
முன்னாள் மனைவி கருத்து
முதல் முறையாக சாண்டி, வனிதாவிடம் குரலை உயர்த்தி எதிர்த்து பேசுகிறார். இதனை பார்த்த அவரது முன்னாள் மனைவியான காஜல், அப்பாடா.. கடைசியா சாண்டி பாய் முகெனுக்கு சப்போர்ட் பண்றான்.. அவன் இப்படி ஒரு ஸ்டாண்ட் எடுத்தது சந்தோஷம் என்று டிவிட்டிருக்கிறார்.
வேற ஏதோ பிளான்
முகென் சேரை தூக்கும் புரமோவை பார்த்தும் டிவிட்டியிருக்கிறார் காஜல். அவர் கூறியிருப்பதாவது, அய்யய்யோ.. முகென் பாத்துடா செல்லம். வேற ஏதோ பிளான் பண்றாங்கப்பா.. கோவப்பட வச்சு ரெட் கார்டு கொடுத்துட போறாங்க.. பாவம்ப்பா இந்த பையன் என பதிவிட்டிருகின்றார்.


Click it and Unblock the Notifications











