க்ளோஸப் வேணாம்மா.. பயமா இருக்கு.. வீடியோ காலில் மனைவியை கலாய்த்த சாண்டி! முன்னாள் மனைவி ரியாக்ஷன்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டி, வீடியோ காலில் பேசிய தனது மனைவியை மரணமாக கலாய்த்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச வாய்ப்பளித்துள்ளார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள லாஸ்லியா அவரது தந்தையுடன் வீடியோ காலில் பேசினார்.
அப்போது எல்லாவற்றையும் வெளியே வந்து சொல்கிறேன் என்ற அவர், இப்போது அவ்ளோதான் சொல்ல முடியும் என்று கூறியது புரமோவில் தெரியவந்தது. இந்நிலையில் சாண்டியும் தனது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசியது இரண்டாவது புரமோவில் தெரியவந்துள்ளது.

மரண கலாய்
அப்போது மனைவி என்றும் பாராமல் மரண கலாய் கலாய்க்கிறார் சாண்டி. லாலா என்று சாண்டி மகளை அழைக்க, அப்பாவுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுக்கிறாள் லாலா.

பயமா இருக்கு
அதனை தொடர்ந்து, மனைவியை நீ எப்படி இருக்கம்மா என தனது மனைவியை கேட்கிறார் சாண்டி. அதற்கு க்ளோஸப்பில் வந்து பதில் சொல்லும் தனது மனைவியை க்ளோஸப்பில் வராதம்மா. பயமா இருக்கு கொஞ்சம் தூரமா போ என்று மரண கலாய் கலாய்க்கிறார் சாண்டி.

என்ன பவுடர் போட்ருக்கீங்களா
மேலும் உங்களால் நாங்கள் ப்ரவுடாக இருக்கிறோம் என்று சாண்டியின் மனைவி பதில் கூற, என்ன பவுடர் போட்டிருக்கீங்களா என்று அதற்கும் கலாய்க்கிறார் சாண்டி. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் நகைச்சுவை மன்னராக இருந்து வரும் சாண்டி தனது குடும்பத்தினரிடமும் அதையே செய்துள்ளார்.
மாறவே இல்லடா
இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல், சாண்டி இன்னும் மாறவே இல்லை என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அவ்.. லாலா.. சாண்டிமேன் ஏன் இந்த கொலவெறி.. பாரபட்சமே இல்லாம கலாய்க்கிறது.. நீ இன்னும் மாறவே இல்லடா என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











