கக்கூஸே பலபலன்னு ஆவுது.. நீ ஆவமாட்டீயா.. வாய காட்டு.. பாத்ரூம் கிளினருடன் மீராவை விரட்டிய சாண்டி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டி, தற்போது விருந்தாளியாக வந்துள்ள மீரா மிதுனை வச்சு செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்தவாரத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சி பினாலேவுடன் நிறைவடைய உள்ள நிலையில், கடைசியாக பிக்பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

யோகா
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது எபிசோடு வெளியாகியுள்ளது. அதில் முன்பு வந்தபோது செய்த, அதே யோகாவை செய்கிறார் மீரா மிதுன்.

கைகளை உருட்டி
இதனை பிரஷ் செய்தப்படியே அருகில் அமர்ந்து வேடிக்கை பார்க்கிறார் சாண்டி. அதனை தொடர்ந்து மீரா மிதுனை போலா கைகளை உருட்டி அவர் செய்யும் யோகாவை கிண்டலடிக்கிறார் சாண்டி.

கக்கூஸே பலபலன்னு ஆகுது
திடீரென கண் விழித்து பார்க்கும் மீரா மிதுன், சாண்டியின் முகத்தை அருகில் பார்த்து அச்சப்படுகிறார். இதனை தொடர்ந்து பாத்ரூம் வாசலில் கையில் பாத்ரூம் கிளினருடன் வரும் சாண்டி, கக்கூஸே பலபலன்னு ஆகுது நீ ஆகமாட்டியா.. வாய திற என்று மீரா மிதுனை விரட்டுகிறார். இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ.
நெட்டிசன்ஸ் நிம்மதி
இந்த புரமோவில் லாஸ்லியா காட்டப்படவில்லை. இதனை பார்த்த நெட்டிசன்கள், நல்ல வேலை இந்த ஜூலி லாஸ்லியாவ காட்டல.. சூப்பர் எடிட்டர் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











