எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை: சங்கவி
90 களில் விஜய், அஜீத்துடன் நடித்த நாயகி சங்கவி. அமரவதி படத்தில் அஜீத் உடன் அறிமுகம். தொடர்ந்து விஜய், சரத்குமார் படங்களின் நாயகியாக நடித்தவர் சங்கவி.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 75 படங்களுக்கு மேல் நடித்த சங்கவி ஒரு கட்டத்திற்கு மேல் சட்டென்று காணாமல் போனார் பின்னர் சாவித்ரி, கோகுலத்தில் சீதை என சீரியலில் நடித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது மீண்டும் சீரியல் பக்கம் வந்துள்ளார். இந்த முறை காலபைரவன் சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இடைவெளிக்கான காரணம் தெலுங்கு டிவி ரியாலிட்டி ஷோவில் கவனம் செலுத்தியதால்தான் என்கிறார் சங்கவி.

அஜீத்-விஜய்
தல, தளபதி என்று ரசிகர்கள் மோதிக்கும் அஜீத், விஜய் ரெண்டு பேருக்கும் ஃபிட்டான நடிகை நான் என்கிறார் சங்கவி.

போலீஸ் உடையில்
சினிமாவில் கிளாமர் ஹீரோயினாக நடித்த சங்கவி, இப்போது காலபைரவன் சீரியலில் போலீஸ் டெபுடி கமிஷனராக நடிக்கிறார். போலீஸ் யூனிபார்ம் தனக்கு செட் ஆகிவிட்டது என்கிறார் சங்கவி.

துப்பாக்கி லைசென்ஸ்
தன்னுடைய பாதுகாப்பிற்காக துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருக்கும் சங்கவி, தனியாக சூட்டிங் போகும் போது துப்பாக்கியுடன்தான் போகிறாராம்.

திருமண வதந்தி
சங்கவியின் திருமணம் பற்றி பல வதந்திகள் நிலவுகின்றன. நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. கல்யாணம் முடிந்துவிட்டது என பலரும் பலவிதமாக வதந்தி கிளப்புவதாக கூறுகிறார் சங்கவி. இன்னும் திருமணம் நடக்கவில்லை. மாப்பிள்ளை பார்க்கின்றனர். நல்ல பையனாக இருந்தால் திருமணம் செய்ய ரெடி என்கிறார்.

அக்கா, அண்ணியாக
சினிமாவில் ஹீரோயினாக நடித்துவிட்டு அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமில்லையாம். சீரியலில் நல்ல ரோல் என்பதால் மீண்டும் நடிக்க வந்திருப்பதாக கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











