twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குப்பை கொட்டுவது போல் கடந்து போகக்கூடாது.. இவங்க இல்லனா முடியுமா? ஜீ தமிழ் புது முயற்சி!

    |

    சென்னை: தமிழா தமிழா என்று விவாத நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.

    இந்த நிகழ்ச்சியை இயக்குனர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் வாரம்தோறும் பல தலைப்புகளில் மக்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

    அதைப்போல மே தினமான உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை சரியாக நடத்துகிறதா சமூகம்? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சியாக இல்லாமல் தூய்மை பணியாளர்களுடன் ஒரு கலந்துரையாடலாக நடைபெறுகிறது.

    உழைப்பாளர் தினம்

    உழைப்பாளர் தினம்

    மே ஒன்றாம் தேதியை உழைப்பாளார் தினமாக கொண்டாடுகிறோம், விடுமுறை நாளாகவும் அறிவிக்கிறோம். கடுமையான வேலை செய்யும் அனைவரும் உழைப்பாளிகள் தான். ஆனால், நம் வாழ்வில் அவசியமான உழைப்பாளிகள் இருக்கிறார்கள். உழைப்பாளர் தினத்திலும் விடுமுறையில்லை ஓய்வில்லை. நம் வீட்டு வாசலுக்கும் நம் தெருவுக்கும் அவர்கள் வராதபோதுதான் அவர்களின் முக்கியத்துவம் புரிகிறது.

    தூய்மை பணியாளர்

    தூய்மை பணியாளர்

    தூய்மை பணியாளர்களை முன்களப்பணியாளர் என்றும் தூய்மை பணியாளர் என்று அழைத்து வார்த்தைகளுக்கு வண்ணம் பூசிக்கொண்டாலும் சமூகத்தின் பார்வை எப்படியிருக்கிறதென்றால், அது அவரின் வேலை கடமை அவர்தான் செய்யவேண்டும் என்று எளிய மனிதர்களிடம் வலிமையான வார்த்தைகளை வீசிவிட்டுப் போகிறோம்.

    விவாத மேடை

    விவாத மேடை

    நம் வீட்டு குப்பைகளைப்போல், அந்த தூய்மைப்பனியாளர்களின் உள்ளக்குமுறல்களையும் சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் பிரச்சனைகளையும் இந்த உழைப்பாளர் தினத்தில் பதிவுசெய்யம் விதமாக ஜீ தமிழ் இந்த முயற்சியை எடுத்துள்ளது. தங்களுக்குள்ளேயே புலம்பிக்கொண்டு இருந்தவர்கள், தமிழா தமிழா நிகழ்ச்சி மூலம் பல நல்ல அனுபவங்களையும் துயரமான நிகழ்வுகளையும் பதிவு செய்கிறார்கள்.

    சமூக அக்கறை

    சமூக அக்கறை

    நம் வாழ்வில் அவசியமான தூய்மை பணியாளர்களை கௌரவிக்க விரும்பிய "தமிழா தமிழா" பதக்கங்கள் அணிவித்தும், சன்மானங்கள் வழங்கி, பாராட்டுவதோடு அவர்களுக்கு நல்ல விருந்தையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஒளிபரப்படுகின்றது. அதே போல் பல சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளையும் ஜீ தமிழ் ஒளிபரப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    தமிழா தமிழா என்று விவாத நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஜீ தொலைகாட்சியில் ஒளிபரப்பக்கின்றது. அதைப்போல மே தினமான உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை சரியாக நடத்துகிறதா சமூகம்? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சியை இல்லாமல் தூய்மை பணியாளர்களுடன் ஒரு கலந்துரையாடலாக நடைபெறுகிறது.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X