Kanmani serial: சஞ்சீவ் நடிப்பில் இப்படி அசத்தறாரே அழவும் வைக்கிறார்!

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் ஓரளவுக்கு சீரியல் விரும்பிகளை கட்டிப்போட்டு இருப்பதற்கு காரணமே நடிகர் சஞ்ஜீவ்தான்.

நடிகர் பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா பாக்கியராஜ், சஞ்சீவின் அக்காவா நடிச்சு இருக்கறதும் சீரியலுக்கு ஒரு பிளஸ்.

மத்தபடி விஜயலட்சுமியின் கணவரா நடிக்கற நடிகர் கேரக்டருக்கு பொருத்தமா இருக்கார். கதாநாயகிகள் ரெண்டு பேர் இருந்தும், யாரோட நடிப்பும் எடுபடலை.

கண்ணன் சவுந்தர்யா

கண்ணன் சவுந்தர்யா

கண்ணன் மனசுல சவுந்தர்யா இன்னும் இருக்காளான்னு தெரிஞ்சுக்க வேற ஊர் பூசாரி கண்ணனிடம் கேள்விகள் கேட்பதும், கண்ணன் சின்ன வயசிலிருந்து சவுந்தர்யாவை தூக்கி வளர்த்தது..அவளுக்கும், தனக்கும்தான் கல்யாணம் என்று வீட்டில் சின்ன வயசிலேயே முடிவு செயதது, கடைசியில சவுந்தர்யா வெளிநாட்டில் படிக்கப் போகும்போது ஆகாஷை லவ் பண்ணிட்டு வந்தது என்று நடந்த எல்லாவற்றையும் அழுதுகிட்டே சொல்லும்போது, ரொம்ப நல்லா நடிச்சு இருக்கார்.

வருட அனுபவம்

வருட அனுபவம்

சஞ்சீவ் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர் என்றாலும், தனக்காக வாய்ப்பு கேட்டு விஜயிடம் நின்றதே இல்லை. ஆரம்பத்தில் விஜய் படங்களில் நடித்தது கூட விஜய்க்கு படத்தில் நண்பர்களாக நடிக்க ஆட்களத் தேவை என்கிற நிலையில் தேர்வு செய்யப்பட்டவர்தான் சஞ்சீவ். நண்பன் நடிக்கும் படத்தில், நண்பனாகவே நடிப்பது கொடுப்பினை என்று கூட கூறி சந்தோஷமாக நடிச்சவர் சஞ்சீவ்.

இருந்தும் ஏன்?

இருந்தும் ஏன்?

சஞ்சீவ் ஒரு நல்ல நடிகர்தான்..சின்னத் திரையில் இப்படி பேர் சொல்லும்படி நன்றாக நடிப்பவர்களும், உணர்ச்சிக்கு ஏத்த மாதிரி,கண்ணீர் வழிய வசனம் பேசி, நம்மையும் அழ வைப்பதும் என்பதுமான நடிகர்கள் என்று விரல் விட்டு எண்ண கூட சின்னத் திரையில் நடிகர்களில் ஆட்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சஞ்ஜீவ்க்கு சன் டிவி சீரியல் திருமதி செல்வத்துக்குப் பிறகு இவ்ளோ இடைவெளி இருந்திருக்க கூடாது.

அடி மனசில் சவுந்தர்யா

அடி மனசில் சவுந்தர்யா

தம்பி உங்க அடிமனசில் இன்னும் உங்க அக்கா பொண்ணு இருக்காங்களா. அவங்களை இன்னும் நீங்க நினைச்சுக்கிட்டுத்தான் இருக்கீங்களான்னு கேட்கிறார் ஒரு கேள்வி. இதற்கு முன் சவுந்தர்யா ஆசையாகப் பேச வரும்போது எல்லாம் கண்ணன் சாதாரணமாகவே எடுத்துக்கிட்டு பதில் சொன்னதுக்கு இப்போது காரணம் சொல்கிறான் கண்ணன். அதாவது சவுண்டு பெரிய படிப்பெல்லாம் பட்டிச்சு இருக்கு...நாம படிக்காதவன் ,பட்டிக்காட்டான்..நமக்கு எப்படியும் கல்யாணம் ஆகத்தானே போகுது...அது இந்த முத்துசெல்வியா இருக்கட்டுமேன்னு நினைச்சேன்னு சொல்றான். இந்த விளக்கம் நல்லாருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X